ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க – ப்ளூ சட்டை மாறனின் ‘மிரள்’ விமர்சனம்.

0
614
Miral
- Advertisement -

பரத்தின் மிரள் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்து இருக்கும் விமர்சனம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக பரத் திகழ்ந்து வருகிறார். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் காதல், வெயில், பட்டியல், எம்டன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், சமீப காலமாக இவரது சில படங்கள் தோல்வியில் முடிந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் புது புது கதைகளத்துடன் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காளிதாஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதேபோல் நடிகர் பரத் அவர்கள் சரண் குமார் இயக்கத்தில் நடுவண் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

பரத் நடிக்கும் படங்கள்:

தற்போது நடிகர் பரத் அவர்கள் ஒரு பாலிவுட் படத்திலும், மலையாள படத்திலும் நடித்து வருகிறார். தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை மையப்படுத்திய கதையில் பரத் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஆக்சன் 22 என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சந்திரன் திக்கோடி என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் பரத், சபரீஷ் வர்மா, இர்ஷாத் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனை அடுத்து தற்போது பரத் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மிரள்.

மிரள் படம்:

இந்த படத்தை எம் சக்திவேல் இயக்கி இருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் பரத்துடன் வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு எஸ் என் பிரசாந்த் இசை அமைத்திருக்கிறார். படத்தில் பரத், வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். வாணி போஜன் அடிக்கடி பயந்து மனதளவில் பாதிப்படைந்து இருக்கிறார். அதனால் அவருடைய சொந்த ஊருக்கு சென்று குலதெய்வம் பூஜை செய்யலாம் என்று குடும்பத்தோடு பரத் செல்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தின் கதை:

பூஜை முடிந்த பின் திடீரென ஒரு இரவு இரவில் கிளம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் இரவு நேரத்தில் காரில் கிளம்பும் பரத் குடும்பத்தினை ஒதுக்குப்புறமாய் மர்மமான ஆட்களால் வழிமறைக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள். அப்போது வாணி, மகன் இருவரும் காணாமல் போகிறார்கள். பரத் அவர்களை தேடுகிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. மிக சஸ்பென்சாக படம் நன்றாக இருக்கிறது. திரில்லிங்காக இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறி இருப்பது, ஒரு ஷார்ட் பிலிம் கதையை ஒரு பெரிய படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

படத்தில் பேய்கள் வரும் காட்சிகள் காண்பிக்கும் போது எல்லோருமே சிரிக்கிறார்கள். ஒரு மணி நேரம் 55 நிமிடம் தான் படம் ஓடி இருக்கிறது. ஆனால், 10 நிமிடத்தில் தான் மொத்த கதையுமே காட்டியிருக்கிறார்கள். மீதி 45 நிமிடமும் பேயா? மனிதரா? என்று பார்வையாளர்கள் குழப்பத்தில் நொந்து போய் விடுகிறார்கள். அதிலும் அந்த பேயை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்று ப்ளூ சட்டை மாறன் வழக்கம்போல் தன்னுடைய பாணியில் விமர்சித்து இருக்கிறார்.

Advertisement