ரோஹித் சர்மா குறித்த மீம்ஸ்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்த மிர்ச்சி சிவா – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே. இதோ வீடியோ.

0
662
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. இவரை அவருடைய ரசிகர்கள் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். மேலும், சிவா இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். பின் 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்ற படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார். இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து மிர்ச்சி சிவா பல படங்களில் நடித்தார். தற்போது இவர் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இடியட் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இடியட் படம் பற்றிய தகவல்:

இந்த படம் ஹாரர் காமெடி பாணியில் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் சுமோ படமும் கூடிய விரைவில் திரைக்கு வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார். வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மிர்ச்சி சிவா நடிக்கும் படங்கள்:

சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும், காசேதான் கடவுளடா, சலூன், கோல்மால் போன்ற பல படங்களில் சிவா நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படம் நீண்ட நாட்களாகவே நிலுவையில் உள்ளது. இது கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

மிர்ச்சி சிவா அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் மிர்ச்சி சிவா இருவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு வந்த மீம்ஸ், க்ரியேட்டர்கள் எல்லாம் வைரலானது. இதுகுறித்து பலரும் பல விதமாக கமென்ட்ஸ் போட்டிருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சிவா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ரோகித் சர்மா குறித்த கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கும் ரோஹித் சர்மாவுக்கு எந்த தொடர்பும் இல்லை.

ரோஹித் ஷர்மா குறித்து சிவா கூறியது:

அவர் ஒரு கடின உழைப்பாளி, கிரிக்கெட் வீரர் மற்றும் நான் ஒரு உள்ளூர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர். எனக்கு அவரைப் பார்க்கும்போது அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒருவேளை மக்களுக்கு தோன்றுகிறதோ? இந்த விஷயத்தை ரோகித் சர்மாவுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பது நல்லது. அதோடு அவரைப் போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். ஆனால், அவர் என்னை மாதிரி நடனமாட முடியாது என்று ஜாலியாக சிவா பேட்டியளித்திருந்தார். இப்படி சிவா அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement