உதய சூரியன் சின்னம், கொடி, உச்சியில் ஸ்டாலின் துர்கா பொம்மை – வைரலாகும் ஸ்டாலின் பிறந்தநாள் கேக்.

0
860
mkstalin
- Advertisement -

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக வெற்றி பெற்று இருக்கிறார் மு க ஸ்டாலின். சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து பல்வேரு பிரபலங்களால் பாரட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள். இவருடைய பிறந்தநாள் குறித்து எல்லோரும் தங்களின் வாழ்த்துக்களை எல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

கொரோனா பரவல் காரணமாக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதை முதல்வர் மு க ஸ்டாலின் தவிர்த்திருக்கிறார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஸ்டாலின் தன்னுடைய பிறந்த நாளை எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் பிறந்த நாளை கொண்டாடுவதை தவிர்த்து வந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறாமல் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற போது கூட ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பதவி ஏற்பு விழாவை கூட எளிமையான முறையில் நடத்தி இருந்தார்.

- Advertisement -

பிறந்த நாள் குறித்து தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:

இந்த நிலையில் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்து தன்னுடைய 69வது பிறந்த நாளை ஸ்டாலின் கொண்டாடி இருக்கிறார். இது முதல்வர் ஆன பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் திமுகவினர் விமர்சையாகக் கொண்டாடத் திட்டம் இருந்தனர். ஆனால், தனது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர், என் பிறந்தநாளை ஒட்டி தொண்டர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்.

கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் இமாலய வெற்றியை அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குதல். வெற்றி பெற்றவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு அதிகமாக இருந்தது. இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும். இதற்காக அல்லும் பகலும் உழைத்து அனைவருக்கும் நன்றி. அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் புதிய உறுப்பினர்களை சேருங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்:

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு க ஸ்டாலின் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார் ஸ்டாலின். அந்த கேக்கில் உதயசூரியன் சின்னத்தில் கருப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதை தனது மனைவி, மகள், மகன், மருமகன் ஆகியோருடன் கேக் வெட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும், இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லிய பிரபலங்கள்:

இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறார்கள். இதனை அடுத்து மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தாலும் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய முக ஸ்டாலினுக்கு பலரும் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement