என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன் – விஜய் டிவி நிகழ்ச்சியில் பேசிய பெண்ணை பாராட்டிய முதல்வர்.

0
1926
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பேசிய போட்டியாளரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார். தற்போது உள்ள யூடுயூப் கலாச்சார காலகட்டத்தில் தமிழுக்காக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மிகவும் சொற்பமே. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி நாம் அறியாத பல்வேறு தமிழ் சொற்களை அறியும் வகையிலும் மாணவர்கள் மத்தியில் தமிழ் பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியை சமீப ஆண்டுகளாக ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டது விஜய் தொலைக்காட்சி.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைக்காட்சியில் தமிழ் மொழிக்காக ஒளிபரப்ப்பட்ட நிகழ்ச்சி தான் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி. இது முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசும் போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியுடைய முக்கிய நோக்கம். அதோடு 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

- Advertisement -

அதற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல்ஹாசன், தொல் திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், வைகோ, ஜெயமோகன் – எழுத்தாளர், நாஞ்சில் சம்பத், ஏ.முத்துலிங்கம், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பாராட்டையும் ஒப்புதலையும் பெற்றுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பல விதமான தலைப்புகளில் பல விதமான சுற்றுக்குள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இடஒதுக்கீடு எங்கள் உரிமை என்ற தலைப்பில் நர்மதா என்பவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பெண்ணுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான – பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை.

-விளம்பரம்-

அதனால்தான் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, “பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்!

பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்” என வாழ்த்தினேன்.எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் “இடஒதுக்கீடு எனது உரிமை” என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!அனைவரும் சொல்வோம் இட ஒதுக்கீடு எங்கள் உரிமை என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement