டி.எம்.கிருஷ்ணா விவகாரம் : மத நம்பிக்கையை கலக்காதீர்கள் – முதல்வர் விளக்கம்.

0
118
- Advertisement -

இசை கலைஞர் டி எம் கிருஷ்ணா விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இது 98 வது மியூசிக் அகாடமி விழா. இதில் சங்கீத கலாநிதி விருதுக்கு கர்நாடக இசைக் கலைஞர் டி எம் கிருஷ்ணா தேர்வாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த மியூசிக் அகடமி மாநாட்டையும் இவர் தான் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இவர் சமூக கருத்துகளையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஆனால், இவருடைய இசை நிகழ்ச்சிகளை கர்நாடக இசை உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக கர்நாடக இசை கலைஞர்கள் ஆன ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள், கர்நாடக இசை உலகில் அதிக சேதத்தை ஏற்படுத்தி பிராமண சமூகத்தின் உணர்வுகளை மிதித்தவர் டி எம் கிருஷ்ணா.

- Advertisement -

டி எம் கிருஷ்ணா குறித்த விமர்சனம்:

இவர் ஆன்மீகத்தை இழிவுபடுத்து வகையில் பேசி வருகிறார். டி எம் கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ரொம்ப ஆபத்தானது. அவருடைய செயல்கள் கர்நாடக இசை கலைஞர்களாக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. இசை உலகில் போற்றக்கூடிய நபர்களான தியாகராஜர், எம் எஸ் சுப்புலட்சுமி போன்றவர்களை டி எம் கிருஷ்ணா அவமதித்து இருக்கிறார். இப்படிப்பட்டவரின் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டால் அது எங்களுடைய நம்பிக்கையை கொச்சைப்படுத்தும்.

பெரியாரை குறித்து சொன்னது:

அதேபோல் ஈ வெ ரா எனப்படும் பெரியாரைப் போற்றும் கருத்துக்களை டி எம் கிருஷ்ணா முன் வைத்திருக்கிறார். பெரியார் ஒருமுறை கூட்டத்தில் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பேசி இருந்தார். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவு படுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளைக் கொண்டு பேசியிருந்தார். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தை திணிக்க வைத்தவர் என்று கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல்வர் ஸ்டாலின் பதிவு:

இதற்கு சோசியல் மீடியாவில் இது தரப்பு மத்தியிலும் விவாதங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், மியூசிக் அகாடமி சார்பில் சங்கீத கலாநிதி விருதுக்கு டி எம் கிருஷ்ணா தேர்வாகி இருப்பதற்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் அவரை ஒரு தரப்பினர் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சித்து வருவது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.

டி எம் கிருஷ்ணா குறித்து சொன்னது:

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும், பெண்கள் சமமானவர்கள் என்று அறவழியில் அமைதி வழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையில்லாமல் வசை பாடுவது நியாயமற்றது. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறான கருத்தைப் பேச மாட்டார்கள். டி எம் கிருஷ்ணா இசை துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் தான் அவரை அகாடமி தகுதியானவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்கு அகாடமிக்கு என்னுடைய பாராட்டுக்கள். டி எம் கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுக்க முடியாத ஒன்று. அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம். தெளிவான பார்வையும், வெறுப்பையும் விலக்கி சக மனிதரை அரவணைக்கும் பண்பே இன்றை தேவை என்று கூறுகிறார்.

Advertisement