பொங்கல் என்பது இந்துக்களின் பண்டிகை இல்லை – மோகன் சி லாசரஸ்ஸின் சர்ச்சை வீடியோ. கடுப்பான விஜயசாரதி.

0
689
vijayasarathy
- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்த கிருஸ்துவ மதபோதனைகளில் ஈடுபட்டு வருபவர் மோகன் சி லாசரஸ். இவர் கிருஸ்தவ மத போதனைகளை பல நிகழ்ச்சிகளில் நடத்தி இருக்கிறார். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் நடந்த மத போதனை கூட்டத்தில் மோகன் சி லாசரஸ் இந்து மத கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய சில விஷயங்களைப் பேசி இருந்தார். அதில் அவர், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கோவில்கள் தான் சாத்தான்கள் என்று இந்து மதக் கோயில்களை அவதூறாக பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருந்தது.

-விளம்பரம்-

இதற்கு இந்துமத அமைப்புகள் தரப்பிலிருந்து கண்டனமும் தெரிவித்திருந்தார்கள். அதோடு பல மாவட்டங்களிலிருந்து மோகன் சி லாசரஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் போலீஸ் மோகன் சி லாசரஸ்ஸை கைது செய்து இருந்தது. மேலும், மோகன் சி லாசரஸ் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின் அந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

- Advertisement -

இந்து மதம் குறித்து மோகன் சி லாசரஸ் கூறியது:

இதுகுறித்து மோகன் சி லாசரஸ் கூறியது, குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கு பெற்ற உள்ளரங்க கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் அளித்தேன். நான் எந்த ஒரு மதவாதி கிடையாது. கலவரத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. ஒத்த கருத்துடையோர் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் அளித்தேன். தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் கூறி மன்னிப்பு கேட்டிருந்தார்.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பு:

மேலும், மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. ஒவ்வொரு மதத்தையும் கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்துவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என இயேசு நாதரே கூறியிருக்கிறார். மத போதனைகள் மற்ற மதத்தினரை துன்புறுத்த வகையில் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் மோகன் சி லாசர‌ஸ் மீது இருந்த வழக்குகளை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்திருந்தது.

-விளம்பரம்-

மீண்டும் வைரலாகும் வீடியோ மோகன் சி லாசரஸ்:

இப்படி ஒரு நிலையில் மீண்டும் மோகன் சி லாசர‌ஸ் உடைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, பொங்கல் என்பது அறுவடை பண்டிகை. இது சபைகளில் அறுப்பின் பண்டிகை என்று கூப்பிடுவார்கள். இந்த அறுவடை பண்டிகைக்கு Pentecostal Day என்று பெயர். அந்த அறுவடையை நாளில் ஆண்டவருக்கு கதிர் கட்டை எடுத்து காண்பிக்க வேண்டும். எங்கள் தெய்வம் தான் நிலத்தை ஆசீர்வதிப்பார், விளைச்சலைப் பெருக்குவர். நாம் தான் அறுவடைப் பண்டிகை கொண்டாடவேண்டும்.

பொங்கல் பண்டிகை குறித்து மோகன் சி லாசரஸ் கூறியது:

ஆண்டவருக்கு நன்றி சொல்லிட்டு விவசாய நிலங்களை காப்பதற்கு ஸ்தோத்திரங்கள் பண்ணி ஜெபிக்க வேண்டும். ஆனால், யாரும் அதை செய்வதில்லை. நாம் வெளிநாட்டிலிருந்து வந்த கலாச்சாரத்திற்கு அதிகம் மதிப்பு கொடுத்ததால் தமிழ் கலாச்சாரத்தை மறந்து விட்டோம். அதனால் நம்முடைய விளைவைப் புரிந்து கொள்ள முயலுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். பிறகு பள்ளிகள், கல்லூரிகளில் கூட சமத்துவ பொங்கல் என்று கொண்டாடுவார்கள் தவிர கடவுளை வைத்துக் கும்பிட மாட்டார்கள். இந்த பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது என்பது பலபேருக்கு தெரியாது.

மீண்டும் எழுந்த சர்ச்சை :

அதுமட்டுமில்லாமல் தமிழ் மக்கள் ஒன்று கூடி கொண்டாடக்கூடிய பொங்கல். இது தமிழர்களுக்கு மட்டும். இது புராண தோடு சம்பந்தப் பட்டது கிடையாது. அறுவடைப் பண்டிகை தமிழர்கல் மட்டும் கொண்டாடக்கூடிய பண்டிகை. இது குறித்து பைபிளில் தெளிவாக எழுதி இருக்கிறது என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் விமர்சித்து வருகிறார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இப்படி மோகன் சி லாசரஸ் பேசியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

மோகனின் கருத்து குறித்து விஜயசாரதி :

இப்படி ஒரு நிலையில் இவரின் இந்த வீடியோ குறித்து கமன்ட் செய்துள்ள நீங்கள் கேட்ட பாடல் தொகுப்பாளரும், நடிகருமான விஜயசாரதி ‘இது போன்ற கலாச்சாரம் அறியாத,காசை மட்டுமே அறிந்த விஷ ஜந்துக்கள் இருக்கும் வரை மக்களை ஒன்று சேர்ந்து நிம்மதியாக வாழவிட மாட்டார்கள். அறிந்ததை சொல்கிறேன், வெளிநாடுகளில் வெறிச்சோடி கிடக்கும் தேவாலயங்களுக்கு நம்பிக்கையுடன் திரும்பிவர இவர்கள் ஏன் அங்கு சென்று பேசகூடாது?பணம்தான் எல்லாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement