தடுப்பூசி பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோகன் சி லாசரஸ் ? – பா ஜ க குற்றச்சாட்டு. அப்படி என்ன சொன்னார்.

0
747
- Advertisement -

சில ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையும் கொரானா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் விட்டுவைக்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொராவினால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் இந்தியாவில் தற்போது தான் இரண்டாவது அலை முடிவடைந்து மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வெளியே சென்றார்கள். அதற்குள்ளே மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் அரசாங்கம் பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
If the corona vaccine is not given ... UN. Issued warning || கொரோனா  தடுப்பூசி செலுத்தவில்லை என்றால்... ஐ.நா. வெளியிட்ட எச்சரிக்கை

இதனால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தடுப்பூசியை போட்டு உள்ளார்கள். இந்நிலையில் இதை பலர் மதத்தின் அடிப்படையில் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நாட்டில் ஒரே ஆண்டில் 157 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

கோவிட் தடுப்பூசி:

தடுப்பூசியில் இந்தியா தான் உலகிற்கே வழிகாட்டியாக இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். கோவிட் தடுப்பு ஊசி செலுத்தியதனால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திமுக தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடுப்பூசி கிடைக்கவில்லை என்ற ஒரு பேச்சும் ஏற்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தில் 8.98 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கமிருக்க தூத்துக்குடியை சேர்ந்த மோகன் சி லாசரஸ் என்பவர் கிறிஸ்துவ மக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது என்று என்றும் செலுத்தினால் பல பிரச்சனைகள் உருவாகும் என்றும் போதித்திருக்கிறார்.

நாராயணன் - பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்

மத போதகர் மோகன் சி லாசரஸ் சர்ச்சை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் கிறிஸ்தவ மத போதகர் மோகன் பேசியது தவறான ஒன்று. மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவது உயிரை பலி கொடுப்பதற்கு சமம். வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி நாராயணன் திருப்பதியின் இந்த குற்றச்சாட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

-விளம்பரம்-

சாந்தகுமார் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் உள்ள `இயேசு விடுவிக்கிறார்’ ஊழியங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் கூறியது, மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் ஜோதிகாவுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின் குடும்பத்துடன் அவதிப்படுவதை விட விஷம் குடித்து செத்து விடலாம் என்று தற்கொலை முயன்றார்கள். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மோகன் சி.லாசரஸ்

பாஜக செய்யும் அரசியல்:

இந்த சம்பவம் குறித்து மத போதகர் மோகன் சி லாசரஸ் கொரோனா வந்து விடுமோ என பயந்து மதுரையில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றது. அனைவரும் முதலில் அச்ச உணர்வை தூக்கி எறியவேண்டும். ஆண்டவரிடம் ஜெபம் செய்யுங்கள். அச்ச உணர்வே எல்லாவற்றுக்கும் காரணம் என்று தான் பேசினார். இப்படி அவர் பேசிய வீடியோவை சிலர் எடிட் செய்து தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். இதற்கு பாஜக செய்யும் அரசியலுக்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement