தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி – CSK ஜெர்சியில் இருந்த விஷயத்தை அழித்த மோகன்.

0
950
MohanG
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பகாசூரன் திரைப்படம் :

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ரிச்சர்ட்டை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியை நேரில் கண்டு களித்த மோகன். CSK ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘தரமான சம்பவமா இருக்கும்னு அடிச்சி புடிச்சி மைதானத்துல மேட்ச் பார்க்க வந்தா இவனுங்க சப்பையா முடிச்சி விடுறானுங்க’ என்று கூறிபிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மது விளம்பரத்தை அழித்த மோகன் :

மோகன் பதிவிட்டு இந்த புகைப்படத்தில் அவரது ஜெர்சியில் சிலதை மறைத்தே பதிவிட்டு இருக்கிறார். அதாவது சென்னை அணியின் ஸ்பான்ஸர்களில் ஒருவராக ஒரு மதுபான நிறுவனமும் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மதுபானப் பெயரை தான் மோகன் தெரியாத வண்ணம் அழித்த அதன் பின்னர் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இயக்குனர் மோகன், பா ம க தலைவர் ராம்தாஸின் ஆதரவாளர் என்பது தெரிந்த விஷயமே.

தலைவனை போல தொண்டன் :

மேலும், ராமதாஸ் அவர்கள் மதுவிற்கு எதிரானவர் தான். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறார். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல, ஜெர்சியில் கூட மதுபான விளம்பரம் தெரிந்துவிடக் கூடாது என்று மோகன் செய்துள்ள இந்த செயல் நிச்சயம் பாராட்டக்குரியது தான்.

Advertisement