தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், கமல் அவர்கள் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கமல் பிரச்சாரம் செய்து இருந்தார். இதை தொடர்ந்து 142 சட்டமன்றத் தொகுதிகளில் கமல் தொடர்ந்து நிறுத்தினார்.
அதோடு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பின் மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், விடாமுயற்சியுடன் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை நடத்தி வருகிறார். பின் சமீபத்தில் கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார். இதற்கு பலரும் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கமலஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
பாராளுமன்ற தேர்தல்:
இதை அடுத்து பலரும் கமல்ஹாசன்-திமுக கூட்டணி இதை என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கேற்ப தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசன்-திமுக கூட்டணி:
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி அதிமுக கூட்டணி அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. அந்த வகையில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது. இதனை அடுத்து கமலஹாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, வர இருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களுடைய எல்லா ஆதரவும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் கிடையாது, நாட்டுக்கான விஷயம். இதனால் எங்கு கைகுலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மோகன் ஜி பதிவு:
மேலும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சார செய்யும் தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து கமலஹாசன் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக கமலை விமர்சித்து இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், திரைப்படங்களில் ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க வித விதமாக அவதாரம் எடுப்பார். ஆனால், நிஜத்தில் ஊழல் செய்பவர்கள் பக்கம் நின்று ஓட்டு கேட்பார். அஞ்சி யஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்று கூறி இருக்கிறார்.
மோகன் ஜி குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் மோகன் ஜி ஒருவர். இவர் பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக என்ற சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் ஜி திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இதனை அடுத்து இவர் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். பின் இவர் செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்து இருந்தார் இயக்குனர். இப்படி இவர் இயக்கிய எல்லா படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.