ஜல்லிக்கட்டுக்கு தடைய உடைக்க நீ என்ன பண்ண – கேலி செய்தவர்களுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த மோகன்.

0
1704
Mohan
- Advertisement -

ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டு டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதி இருந்தது. இதனை அடுத்து இளைஞர்கள் உட்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இது தமிழகத்தை மட்டும் இல்லாமல் இந்தியாவிலேயே பெரும் அதிர்வலையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. பின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்திருந்தது.

- Advertisement -

ஜல்லிக்கட்டு பிரச்சனை:

மேலும், அந்த அவசரத் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற தொடங்கியது. இதனிடையே ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி அந்த அவசர சட்டத்திற்கு பீட்டா என்ற விலங்குகள் நலவாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. பின் உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று புது சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதனால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும் இனிமேல் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இது தமிழக மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

மோகன் ஜி போட்ட பதிவு :

அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் கம்பாலா போட்டிக்கும் தடையை நீக்கி இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக மக்கள் மட்டுமல்லாது பல திரையுலக பிரபலங்களும் வரவேற்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஜல்லிக்கட்டு தடை நீக்க தீர்ப்பை வரவேற்கும் விதமாக இயக்குனர் மோகன் ஜியும் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

கேலி செய்தவர்களுக்கு பதிலடி :

அதில் ‘இந்த ஜல்லிக்கட்டு தடையை உடைக்க ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.. சிறப்பான தீர்ப்பு’ என்று பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவை பார்த்த பலர் உனக்கும் ஜல்லிக்கட்டுக்கு என்ன சம்மந்தம் என்று கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோகன்.

Advertisement