‘எனக்கு கதையே சொல்லல’ குற்றம் சாட்டிய ஷீலா – அவரின் பழைய வீடியோவை லைக் செய்து பதிலடி கொடுத்த மோகன்.

0
561
sheela
- Advertisement -

திரௌபதி படத்தில் நடித்தது குறித்து நடிகை ஷீலா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் தான் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மோகன் ஜி திரைப்பயணம்:

மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார். தற்போது மோகன் ஜி தான் இயக்கி வரும் படம் பகாசூரன்.ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் திரௌபதி பட நடிகை வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திரௌபதி பட நடிகை வெளியிட்ட வீடியோ:

அதாவது, திரௌபதி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஷீலா ராஜ்குமார். இவர் ஜாதிய துவேஷம் படத்தில் நடித்து இருக்க கூடாது என்று சமூக வலைதளங்களில் இவரை குறித்து கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே ஷீலா காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரௌபதி படத்தில் நடித்தது தொடர்பாக ஷீலா ராஜ்குமார் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திரௌபதி படத்தில் நடித்தது கெட்ட கனவாக இருக்கிறது.

-விளம்பரம்-

வீடியோவில் ஷீலா கூறி இருப்பது:

முழு கதையும் என்னிடம் சொல்லப்படவில்லை. இயக்குனர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது. இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருப்பேன். என்னுடைய வேலையை என்னிடம் தெளிவாகக் கூறினால் அதை செய்யாலாமா? வேண்டாமா? என்ற முடிவை நான் எடுப்பேன். திரௌபதி படத்தை எனக்கு மிகப்பெரிய பாடமாக பார்க்கிறேன் என்று பேசியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து முழு கதையை கூறாமல் ஏமாற்றி நடிகையை நடிக்க வைத்து விட்டாராம் மோகன் ஜி என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

மோகனின் ரியாக்ஷன் :

இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் இருவர் ஷீலா அளித்த பழைய பேட்டி ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், திரௌபதி படம் குறித்து பேசி இருக்கிறார். அந்த பதிவை பகிர்ந்த ட்விட்டர் வாசி ஒருவர் ‘சினிமாவை பொறுத்த வரையில் யாரும் கதைகேட்டகாமல் நடப்பதில்லை.அட்லீஸ்ட் அவங்களோட கேரட்டர் ஸ்டோரி ஆச்சியும் கேட்டுட்டுதான் நடிப்பாங்க. கதைகேக்காமல் நடிக்க இங்கு யாரும் பைத்தியம்மும் இல்லை.அந்த பைத்தியம் கதை கேட்டு பிடிச்சி நடிசேன் என்று சொல்லம் வீடியோவ அடுத்த பதிவுவில் பதிவிடுகிறேன்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை மோகன் லைக்கும் செய்து இருக்கிறார்.

Advertisement