சமூக அக்கறை என்ற பெயரில் பள்ளி வகுப்பறையில் எடுத்த வீடியோவை பகிர்ந்த மோகன் – குவிந்த எதிர்புகளால் நீக்கப்பட்ட பதிவு.

0
694
Mohan
- Advertisement -

பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளகி இருக்கிறது. பாலிவுட் பட இயக்குனர் அனுராக் கஷ்யப் பகாசூரன் படத்தை பற்றி போட்டுள்ள ட்விட் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார்.

-விளம்பரம்-

சர்ச்சையான படங்கள் :

ஆனால் பழைய வண்ணாரப்பேட்டை படம் அந்த அளவிற்கு இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம்.

- Advertisement -

இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது செல்வராகவனை வைத்து “பகாசூரன்” என்ற படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் மோகன் ஜி. இப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி இருந்தது.

பகாசூரன் :

இந்நிலையில் இப்படம் அதிகமாக பிற்போக்கு தனமான கருதுகளை கூறுவதாக விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் இப்படத்தில் போன்கள் ஆபத்தானவை என்றும் பெண்களின் மீதே குற்றங்ககளை சுமத்துவதாகவும், பெண்கள் சரியாக இருந்தால் போதும் இது போன்ற பிரச்சனை வராது என படம் பிற்போக்கு தனமான கருத்துக்களை கூறுவதாக சர்ச்சை எழுந்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களை திருந்த சொல்கிறாரே தவிர பிரச்னை ஏற்படுத்துபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்

-விளம்பரம்-

மோகன் ஜி பகிர்ந்த சர்ச்சை பதிவு :

இந்த நிலையில் தான் மோகன் ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில் மாணவரும், மாணவியும் பள்ளி சீருடையில் நெருக்கமாக இருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. மேலும் அந்த பள்ளி மாணவர் மற்றும் மாணவியின் முகங்கள் தெளிவாக தெரிகிறது. இப்படியொரு நிலையில் இந்த சர்ச்சையான பதிவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

காவல்துறைக்கு கோரிக்கை :

இவர் போட்டிருந்த பதிவு வைரலான நிலையில் பள்ளி மாணவ, மாணவியரின் இந்த வகையான பதிவுகளை யாரும் பாக்கவோ, அல்லது பகிரவோ கூடாது என்று சட்டம் இருக்கிறது என்று மோகன் ஜியை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த அடிப்படையான விஷியத்தை கூட அறிந்து கொள்ளாத மோகன் ஜி ஒரு இயக்குனராக இருந்து கொண்டு சமூக அக்கறை கூட இல்லாமல் இப்படிபட்ட பதிவு எப்படி பகிரலாம்.

இவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூம் எடுக்கவே அந்த பதிவு தன்னுடைய முகநூலில் இருந்து நீக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

Advertisement