கணவன் மார்களே பிளீஸ், உங்க உங்க பொண்டாட்டிக்கு இத மட்டும் பண்ணனுங்க – ஆண்களுக்கு நீபா கொடுத்த அட்வைஸ்.

0
636
Neepa
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நீபா. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே சினிமாவில் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்கவில்லை. இதனால் இவர் சீரியல் பக்கம் வந்துவிட்டார். மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிகை மட்டும் இல்லாமல் டான்ஸரும் ஆவார். இவர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுகிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நீபா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், தமிழில் ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கு.

- Advertisement -

நடிகை நீபா பேட்டி:

சமீபகாலமாக நெகட்டிவ் கதாபாத்திரம் பண்ணாமல் இருந்தேன். இப்போது மீண்டும் பண்ண ஆரம்பித்து இருக்கிறேன். இந்த ரோல் குறித்து இயக்குனர் என்னிடம் பேசினார். அவர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. நான் தெலுங்கு ப்ராஜெக்ட் ஒன்னு பண்றேன். அது பண்ணிட்டு இருக்கும்போது தேதி பிரச்சினை வந்தது. ஆனால், இந்த சீரியல் மிஸ் பண்ண மனசு இல்லை. பின் இரண்டு சீரியலிலும் தேதி வாங்கி பேலன்ஸ் பண்ணி நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சீரியல் அனுபவம்:

இப்போது கூட வெளியில் யாராவது பார்த்தாலும், நீங்கள் காவலன் படத்தில் வடிவேலு சார் கூட வந்தவர்கள் தானே, மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடினவர்கள் தானே என்று கேட்கிறார்கள். சமீபத்தில் கூட தங்கமகள் சீரியலில் நீங்க தானே நடிக்கிறீங்க? என்றெல்லாம் கேட்டார்கள். இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிப்பு மட்டுமில்லாமல் நான் ஆன்லைனில் பசங்களுக்கு பரதநாட்டியமும் கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறேன்.

-விளம்பரம்-

குடும்பம் குறித்து சொன்னது:

பேமிலி சப்போர்ட் இல்லை என்றால் என்னால் எதுவுமே பண்ண முடியாது. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெற்றோர்கள் சப்போர்ட் பண்ணனும். கல்யாணத்துக்கு பிறகு கணவருடைய சப்போர்ட் ரொம்பவே முக்கியம். என்னுடைய கணவரும் அவர் வீட்டில் உள்ளவர்களும் என்னையும் என் பேசனையும் புரிந்து கொண்டு எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள். எல்லோருக்கும் இது மாதிரி வாழ்க்கை அமையுமா என்று தெரியவில்லை. எல்லோருமே அவர்களுடைய மனைவிக்கு சப்போர்ட் செய்யுங்கள்.

நீபா சொன்ன அறிவுரை:

மேலும், மற்றவர்கள் சொல்வதை கேட்டு நான் குற்ற உணர்ச்சியெல்லாம் ஆனதில்லை. மற்றவர்கள் பேசுவதை பற்றி யோசித்தால் நம்முடைய வாழ்க்கையில் அடுத்த ஸ்டேப் போக முடியாது. எனக்கு என் பேமிலி என்ன நினைக்கிறார்கள் மட்டும்தான் ரொம்ப முக்கியம். அடுத்தவங்க சொல்றதை ஷேர் பண்ணிக்க மாட்டேன். அப்படி பண்ணினால் அடுத்தடுத்து நகரவே முடியாது. நான் தெலுங்கு சீரியல் பண்ண ஆரம்பித்ததுமே youtube-ல் வீடியோ போட ஆரம்பித்தேன். நான் பண்றது பார்த்து விட்டு என்னுடைய பிள்ளைகளும் பேசி வீடியோ பண்றாங்க. இப்போ உள்ள குழந்தைகளுடைய ஐக்கியு லெவல் வேற மாதிரி இருக்கு. கவனமாக தான் அவர்களை பார்க்க வேண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement