விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.
சினிமாவில் ஜொலித்து வரும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் :
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இப்போது ஸ்டார்களாக உள்ளார்கள். திவாகர், சந்தோஷ் பிரவீன், சத்யபிரகாஷ் என்று பலரும் கோலிவுட்டில் பாடகர்களாக இருக்கிறார்கள். அதேபோல் ஜூனியர் சீசனில் கலந்துகொண்ட நித்திய ஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா என்று பல பேரும் தற்போது வளர்ந்து பாடகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல சிறுவர்கள் சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் பிரியங்கா :
சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் பிரபலமடைந்த பூவையர், தற்போது தமிழ் சினிமாவில் ஜூனியர் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்குபெற்ற பாடகி ஒருவர் தற்போது பல் மருத்துவராக அவதாரமெடுத்துள்ளார். அது வேறு யாரும் இல்ல பிரியங்கா தான்.சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரிங்கா. இந்த நிகழ்ச்சியின் முன்னணியில் வந்த அவர் இறுதிச்சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும், அவரது பாடல் மூலம் ரசிகர்கள் கூட்டத்தில் அதிகப்படுத்தியுள்ளார்.
மருத்துவரான பிரியங்கா :
அதிலும் இவர் ‘சின்ன சின்ன வண்ணக் குயில்’ பாடலை மட்டும் பல நூறு முறை பாடி இருப்பார். பிரியங்கா எந்த மேடை ஏறினாலும் ‘மன்னவன் பேரை சொல்லி’ என்று படாமல் இருந்தது கிடையாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையிலும், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார்.
இலவச முகாமில் சிகிச்சை :
இப்படி ஒரு நிலையில் இவர் மருத்துவராக மாறி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தார் அதனைத் தொடர்ந்து மருத்துவமனை தொடங்க முயற்சித்த அவருக்கு கொரோனா தொற்று தடை போட்டது.ஆனால் தற்போது தனது மருத்து சேவையை தொடங்கியுள்ள பிரியங்கா. மேலும், அடிக்கடி இலவச மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவராக மாறினாலும் தனது சங்கீத துறையை பிரியங்கா கைவிட போவது இல்லையாம்.