100 சீரியல்கள் நடித்தும் கிடைக்காத பாராட்டு – ஒரே எபிசோடில் எதிர் நீச்சல் வாங்கி கொடுத்த பெயர்.

0
1059
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் புதிய எபிசொட் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார் பிரபல சீரியல் நடிகர் கமலேஷ். சன் டிவியில் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை இருவருக்கும் கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று அதிகம் செய்து அதிகம் அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடிவதில்லை.

- Advertisement -

விறுவிறுப்பான திருப்பு முனைகள் :

இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்து பேசாமல் இருந்த பட்டம்மாள் பேச தொடங்கியதும் ரசிகர்களினாலேயே கணிக்க முடியாத பல திருப்பு முனைகள் இந்த சீரியலில் நடந்து வருகிறது. குறிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் தான் இவர் தன்னுடைய பெயர் பட்டம்மாள் எம்.எ என்று இந்த வீட்டில் தனக்கு 40 சதவீதம் பங்கு இருக்கிறது என்று வீட்டில் உள்ள அனைவரையும் அதிர வைத்தார். அதற்க்கு பிறகு திடீரென கானால் போய் மீண்டும் வந்துள்ளார்.

எதிர்நீச்சல் ஞானம் :

இந்த சிரியலில் அண்ணன் சொல்பேச்சை கேட்டு நடக்கும் தம்பிகள் மத்தியில் வீட்டிற்கு மருமகளாக வரும் சவாரி, ரேணுகா,நந்தினி போன்றவர்கள் அந்த வீட்டில் நடக்கும் அநியாயங்களை அப்பத்தாவாக வரும் பட்டம்மாவுடன் இணைந்து தட்டி கேட்பதை மையமாக கொண்டு கதை நகருகிறது. இந்த சீரியலில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் வரும் கமலேஷ் அண்ணன் சொல்வது தவறு என்று தெரிந்தும் அதற்கு எதிர்ப்பு கூறாமல் யோசித்தபடி இருக்கும் கதாபாத்திரமாக கமலேஷ் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

சக்தியின் துணிவு :

இந்நிலையில் ஜனனியின் கணவன் சக்தி தன்னுடய அண்ணண் தவறாக சொல்கிறார் என்று உணர்ந்த சக்தி தன்னுடைய மனைவிக்கு ஆதரவாக நிற்கிறார். இப்படியொரு நிலையில் புதிய ப்ரோமோ வெளியானது. அதில் சாகுறத்திற்கு கூட தைரியம் இல்லை என்று ஞானம் அழுகிறார். அப்போது குறுக்கிட்ட சக்தி பொம்பள பேச்ச கேட்டா அழிஞ்சு போய்டுவானு சொல்லுவாங்க. ஆனால் அதை நம்பாதே என்று சமாதனப்படுத்துகிறார்.

பாராட்டை பெரும் கமலேஷ் :

நேற்றய எபிசோடில் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கைமேஷ் தான். இவரது நடிப்பை பார்த்த பலரும் எங்களுக்கே அழுகை வருகிறது என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கமலேஷ், ஆனந்தம் சீரியல் துவங்கி 100க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தேன் ஆனால், எனக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் எதிர் நீச்சல் தொடரின் ஒரே எபிசோட் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துவிட்டார்.

Advertisement