தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விமல். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பரமசிவன் பாத்திமா. இந்த படத்தில் கலையரசன், சாயா தேவி, கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கார்வண்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவாக இயக்குனர் மோகன் ஜி போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய நண்பர் இசக்கி கார்வண்ணன் இயக்கியிருக்கும் பரமசிவன் பாத்திமா படம் வெளியாகியிருக்கிறது. அவர் தமிழர்கள் மீது அதிக பற்று கொண்டவர். அப்படிப்பட்டவர் ஒரு பணத்தை இயக்கியிருக்கிறார் என்றால் அந்த படம் எப்படி இருக்கும். என்ன மாதிரியான கருத்துக்களுடன் இருக்கணும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ட்ரைலரை பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தை இன்னும் பார்க்கவில்லை. நான் திரௌபதி 2 படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறேன்.
மோகன் ஜி பதிவு:
இந்த மண்ணுக்கானவர் யார்? தமிழ்நாட்டின் பூர்வ குடிகள் யார்? என்பதை ஹாரர் ஃபீலிங்கில் எடுத்துள்ளார்கள். இந்த படத்தினுடைய ஸ்னீக் பீக் பார்த்தேன். நன்றாக இருந்தது. எம்எஸ் பாஸ்கர் பேசும் வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சுப்பிரமணியபுரமாக இருக்கும் ஊரை எப்படி யாக்கூப்புரமாக மாற்றுகிறார்கள் என்பதை படம் பேசுகிறது. இது போன்ற கதை, திரைக்கதை போன்ற படங்களில் நடிப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வேண்டும். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோன்ற படங்களுக்கு மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
நன்றி @mohandreamer அண்ணா 💐@director_esakki #ParamasivanFathima From Today In Theatres pic.twitter.com/3yG2tgCbUS
— Karthik Ravivarma (@Karthikravivarm) June 6, 2025
இசக்கி கார்வண்ணன் பதிவு:
அப்போதுதான் அது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோவை பார்த்த இயக்குனர் இசக்கி கார்வண்ணன், நன்றி தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மோகனுக்கும் எனக்கும் நேரடியான பழக்கம் எதுவும் இல்லை. சக இயக்குனராக மட்டுமே அவரை எனக்கு தெரியும். ஆனால், தானாக முன்வந்து இந்த படத்தை பாராட்டியிருக்கும் சகோதரர் மோகன் ஜிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று கூறியிருக்கிறார்.
இயக்குனரை எனக்கு நேரடி பழக்கம் என எதுவும் கிடையாது ஒரு இயக்குனராக அறிவேன்.
— director esakki (@director_esakki) June 6, 2025
அப்படியிருக்க தானாக வந்து 'பரமசிவன் பாத்திமா'படத்தை ஆதரித்த இயக்குனர் சகோதரர் திரு.மோகன்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
@mohandreamer @Karthikravivarm pic.twitter.com/bOgPbyalj1
கதைக்களம்:
படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் இருக்கிறது. இங்கு மதப் பிரச்சினையால் 3 கிராமங்களாக பிரிந்து இருக்கிறது. கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையே ஹீரோ விமல், ஹீரோயின் சாயாதேவி காதலிக்கிறார்கள். பின் இந்த கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை விமல் மற்றும் சாயாதேவி சேர்ந்து கொலை செய்கிறார்கள்.

அதோடு சிலரை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இன்னொரு பக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விமல்- சாயா தேவி எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை? எதற்காக மத கலவரம் ஏற்படுகிறது? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.






