நித்தியானந்தாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்த இயக்குனர் மோகன் ஜி தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பகாசூரன் :
இந்நிலையில் தான் இவர் இயக்கிய பகாசூரன் படம் கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்னரே படத்திற்காக எதிர்ப்பும் அதே நேரத்தில் வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் படம் வெளியாவதற்கு முன்னரே பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் “அழகான ப்ரொபைல் பிட்சர் வைக்காதீர்கள்” என சில சர்ச்சையான விஷியங்களை சொல்லி விமர்சனத்திற்கு உள்ளகி இருந்தார் இயக்குனர் மோகன் ஜி.
இந்நிலையில் தான் இவர் இயக்கி நடிகர் செல்வராகவன் நடித்த “பகாசூரன்” படம் வெளியானது. இப்படம் அதிகமாக பிற்போக்கு கருத்துகளை கூறுவதாகவும், பெண்கள் வீட்டிற்குள்லேயே இருக்க வேண்டும் என்றும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆபத்தானது என்று சொல்வதாகவும் பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இருந்தாலும் படம் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வசூலை பெற்று வருகிறது.
நித்தியானந்தா விடியோவை பகிந்து மோகன் ஜி :
இந்த நிலையில் தான் இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வீடியோ ஒன்றிய பகிர்ந்திருந்தார் ” அந்த வீடியோவில் வள்ளல் மகாராஜரின் நூல் வெற்றிகரமாக வெளிவந்ததற்கு வாழ்த்துகள் என்றும், அதனை முகநூலில் பகிர்ந்த மோகன் ஜிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் நித்தியானந்தா. மேலும் இந்த விடியோவை நித்தியானந்தா ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்த பதிவு பகிர்ந்த மோகன் ஜி “மிக்க நன்றிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மிக்க நன்றிங்க 🙏🙏 https://t.co/GqAVdhi01i
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 8, 2023
விமர்சிக்கும் நெட்டிசன்கள் :
இவர்கள் இருவரின் பதிவும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். ஏற்கனனே இயக்குனர் மோகன் ஜி சில மதத்தை மட்டுமே குறியாக வைத்து தாக்குகிறார் என்றும், சர்ச்சையான படங்களுக்கும் பெயர் போனவர், இவர் சமீபத்தில் எடுத்த பகாசூரன் படம் கூட பெரும் சர்ச்சைக்கு உள்ளகியது. அதனை தொடர்ந்து சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நித்தியானந்தா தற்போது மோகன் ஜியை புகழ்ந்து பேசியிருப்பதும், அதனை மோகன் ஜி பகிர்ந்திருப்பதும் பெரும் சர்ச்சிக்குள்ளாகி வருகிறது.