-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

வெற்றிமாறன் உதவியாளர் இயக்கிய ‘BAD GIRL’ படத்தை பாராட்டிய ரஞ்சித்தின் பதிவிற்கு மோகன் ஜி காட்டமான ரிப்ளை

0
276

பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தை, இயக்குனர் மோகன் ஜி கண்டித்து போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாக்கி வருகிறது. அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘Teejay’ அருணாச்சலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்தப் படத்தின் டீசர் வெளியீடு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப், படத்தின் நடிகர்கள், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ் தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒரு பெண்ணின் வாழ்க்கையிலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை விருந்தினர்கள் அனைவரும் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

படம் குறித்து:

மேலும், இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமின் 54 வது பதிப்பில் அதன் உலக அரங்கேற்றத்திற்கு தயாராகி வருகிறது. இப்படம் ஒரு பெண்ணின் சோதனைகள் மற்றும் மின்னல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரில் ஒரு டீன் ஏஜ் பெண் எப்போதும் ஒரு காதலனை வைத்திருக்க விரும்புகிறாள். படத்தில் அந்த பெண்ணை ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் அவளது பெற்றோர்கள் தலையிட்டு அடிக்கடி கண்டிக்கிறார்கள்.

பா ரஞ்சித் பாராட்டு:

கடைசியில் ஒரு சில சம்பவங்கள் அவளை வீட்டை விட்டு வெளியேறத் தள்ளுகிறது‌. இந்த முடிவு அவள் எப்போதும் இருக்க விரும்பும் நபராக மாற அனுமதிக்கிறது. டேட்டிங் ஆப் பற்றி தாயும் மகளும் பேசுவதுடன் படத்தின் டீசர் முடிகிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில், ‘பேட் கேர்ள்’ படத்தை பார்க்க நேர்ந்தது, இது உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். இப்படியான துணிச்சலான கதையை ஆதரித்ததற்கான பெருமை இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை சேரும்.

-விளம்பரம்-

பா ரஞ்சித்தின் பதிவு:

மேலும், இந்த படத்தில் பெண்களின் போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்ப்புகளையும் ஒரு தனித்துவமான சினிமா பாணியில் காட்டப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் இயக்குனர் வர்ஷா என்று இந்த படத்தின் டீசர் லிங்கை பகிர்ந்திருந்தார். இதற்கு இயக்குனர் மோகன் ஜி, தனது எக்ஸ் தளத்தில், ‘பேட் கேர்ள்’ படத்தில் பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டதிற்காக வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரையும், படத்தை பாராட்டிய ரஞ்சித்தையும் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மோகன் ஜி காட்டம்:

மோகன் ஜியின் பதிவில், ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த கூட்டத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மற்றும் அவர்களை சார்ந்தோரிடமிருந்து இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும். பிராமண அப்பா அம்மாவை வசைபாடுவது எல்லாம் பழசு, ட்ரெண்டிங் கிடையாது. இது போன்ற படங்களை உங்கள் சொந்த ஜாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news