மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் மோகன்லால். இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இவர் தரமான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவரோட நடிப்பில் ஏற்கனவே வெளியாகி செம ஹிட் ஆன படம் தான் த்ரிஷ்யம் 3. தற்போது இந்த படத்தினுடைய மூன்றாவது பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக த்ரிஷ்யம் 3 இருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்

கதைக்களம்:
படத்தில் வழக்கம் போல ஜார்ஜ் குட்டி மற்றும் அவரை குடும்பத்தை சுற்றி தான் கதை நகர்கிறது. முதல் இரண்டு பாகங்களில் நாம் பார்த்த அதே கதாபாத்திரங்கள் தான். இரண்டாம் பாகம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கதை தொடங்குகிறது. ஹீரோ மோகன் லால் கேஸை ஊரே மறந்து விடுகிறது. இனி நம்ம குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஹீரோ இருக்கிறார். தன் மகளுக்காக ஹீரோ மாப்பிள்ளை பார்க்கிறார். இரண்டு குடும்பமும் பேசி முடிக்கிறார்கள்.
பிறகு ஹீரோ மகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று திருமணத்தை நிறுத்துகிறார்கள். யார் இவர்கள்? எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்று மோகன்லால் தேடி அலைகிறார். அதே நேரத்தில் ஹீரோவின் வீட்டிற்கு நடு இரவில் யாருக்கும் தெரியாமல் ஒருவர் தினமும் வந்து செல்கிறார். பிறகு மீண்டும் அந்த பழைய பிரச்சனைக்குள் ஹீரோவின் குடும்பம் செல்கிறது. இதில் இருந்து எப்படி ஹீரோ குடும்பம் மீண்டது என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ மோகன்லால் வழக்கம்போல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஜார்ஜ் குட்டி ரோலில் தன்னுடைய நகைச்சுவை உணர்வையும் மோகன் லால் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஹீரோ மகள் கல்லூரி செல்லும் அளவிற்கு வளர்ந்து இருந்தாலும் பிரச்சனை மட்டும் தீரவில்லை. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், முதல் இரண்டு பாகத்தில் இருந்த நேர்த்தியான ரைட்டிங் இதில் இல்லை.

கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது என்று தான் சொல்லணும். முதல் பாதி பொறுமையை சோதிக்கும் அளவிற்கு பொறுமையாக நகர்கிறது. எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் செல்கிறது. ஆனால், இடைவெளிக்கு பிறகு தரமான ட்விஸ்ட். சுவாரசியம் தான் கொஞ்சம் குறைவு. கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் வழக்கம் போல பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாமே பட்டைய கிளப்புகிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது
நிறை:
மோகன்லால் நடிப்பு
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் அற்புதம்

குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கொடுத்திருக்கலாம்
படத்தில் சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் த்ரிஷ்யம் 3 - பரபரப்பு குறைவு






