கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவின் மூலம் சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் மோனலிசா. ஒரே நாளில் இவர் இந்தியா முழுவதும் மிக பிரபலமானார் என்று சொல்லலாம். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மோனலிசா திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தான் முதன் முதலில்
தன்னுடைய படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாக சொல்லி அட்வான்ஸ் கொடுத்து மோனலிசாவை ஒப்பந்தம் செய்திருந்தார்.

தொடக்கத்தில் இருவருமே பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று சனோஜ் மிஸ்ராவின் மீது மோனலிசா பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதை அடுத்து சனோஜ் மிஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தார்கள்.
மோனலிசா குறித்த தகவல்:
இயக்குனர் சிறைக்கு சென்ற பின் மோனலிசாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கேள்வி எல்லாம் இருந்தது. பின் இவர் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் மோனலிசா, நான் முதன் முதலில் சனோஜ் மிஸ்ரா படத்தில் தான் கமிட்டாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னிடம் ரொம்ப தவறாக நடக்க தொடங்கினார்.
https://www.youtube.com/watch?v=gTo0rp4qEzI
இயக்குனர் கைது:
என்னுடைய குடும்பத்தினர் அங்கே தான் இருந்தார்கள். இருந்தாலும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னுடைய உடல் பாகங்களை தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார். அது எனக்கு பிடிக்கவே இல்லை.
இதைப் பற்றி நான் அவரிடம் நேரடியாகவே கேட்டேன். அதற்கு அவர் முதல் படம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று சாதாரணமாக பதில் அளித்தார். முதல் படம் என்றால் என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாமா? முதல் படம் என்றால் பாலியல் வன்கொடுமை செய்வீர்களா? என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.
View this post on Instagram
மோனலிசா புகார்:
மேலும், இயக்குனருடைய இந்த அத்துமீறல் என்னை ரொம்பவே மனரீதியாக பாதித்தது என்றும் மோனலிசா பேட்டி அளித்திருக்கிறார். இப்படி இவர் கூறி இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் நடிகை மோனலிசா அவர்கள் நடிகர் ஃபர்மான் கானை தன்னுடைய வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






