எது உண்மையான கடவுள் – மூக்குத்தி அம்மன் சொல்லும் பிலாசபி – முழு விமர்சனம்.

0
3208
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவம்பர் 14) ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர்.இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பற்றி முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-
Mookuthi Amman - Wikipedia

கதைக்களம் :

- Advertisement -

ஓடிப்போன அப்பா, தாத்தா அம்மா மூன்று தங்கைகள் என்று செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் ஆர் ஜே பாலாஜி குடும்பத்தின் நபர்கள் எண்ணிக்கைக்கு அதிகமாக பல கஷ்டங்கள் உடன் வாழ்ந்து கொண்டு வருகிறார் ஆர் ஜே பாலாஜி செய்தி சேகரிப்பாளராக இருக்கும் அதே ஊரில் பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டுவதற்காக ஒரு சாமியார் வருவது குறித்து ஆர் ஜே பாலாஜி செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறார். இதனிடையே ஆர் ஜே பாலாஜி யின் அம்மாவாக வரும் ஊர்வசி பல ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் அடிக்கடி ஏதாவது ஒரு வேடிக்கையான காரணங்களால் அவரால் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

ஒரு கட்டத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கஷ்டங்கள் நீங்கும் என்று கூற, தங்களது குல தெய்வம் யாரென்று தேடிப்பிடித்து ஒரு அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள் அதுதான் மூக்குத்தி அம்மன் கோவில்.குடும்ப கஷ்டங்கள் நீங்க குடும்பத்தோடு மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கே பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலை சீர் செய்து பின்னர் தான் படும் கஷ்டங்களை எல்லாம் ஆர் ஜெ பாலாஜி கொட்டி தீர்க்கிறார் . அதன்பின்னர் குடும்பத்தார்கள் அனைவரும் கோவிலிலேயே இரவு தங்கி விட மூக்குத்தி அம்மனாக ஆர்ஜே பாலாஜி முன் தோன்றுகிறார் நயன்தாரா.

-விளம்பரம்-

பின்னர் ஆர்ஜே பாலாஜி ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி தான் அம்மன் என்பதை நிரூபிக்கும் நயன்தாரா. பின்னர் கடவுள் என்றால் திருப்பதி கோயிலுக்கு தான் செல்ல வேண்டுமா நாங்கள் எல்லாம் கடவுள் கிடையாதா என்னுடைய கோவிலையும் திருப்பதியை போல பிரபலமடைய செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறார். நீங்கள் கடவுள்தானே நீங்களே இதை செய்து விடலாமே என்று ஆர்ஜே பாலாஜி கூற நான் மற்றவர்களுக்கு தன வரம் அளிக்க முடியும் . ஆனால், என்னுடைய ஆசையை என்னால் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார். இதனிடைய படத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல சாமியார் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் கட்டுவதாக வருகிறார். அவர் ஆக்கிரமிக்கும் இடத்தில்தான் மூக்குத்தி அம்மன் கோவிலும் இருக்கிறது. பின்னர் ஆர் ஜே பாலாஜி உடன் சேர்ந்து மூக்குத்தி அம்மன் ஆன நயன்தாரா போலி சாமியாரை எதிர்த்து எப்படி அங்கே ஆசிரமத்தை கட்ட விடாமல் தடுக்கிறார் என்பதுதான் கதை.

பிளஸ் :

  • இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார் என்று அறிவித்த போது பலரும் ‘என்னது நயன்தாரா அம்மனா’ என்று கேலி செய்தனர். ஆனால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மாடர்ன் அம்மனாக கச்சிதமாக பொருந்தியுள்ளார் நயன்தாரா.
  • நயன்தாராவை அடுத்து அவரது நடிப்பை ஓவர் டேக் செய்யும் பாலாஜி, அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ள ஊர்வசியின் நடிப்பு பலம்.
  • ‘பக்தில யாரும் கோவிலுக்கு வரல பயத்துல தான் வராங்க’, ‘நீ நம்பல நான் கொடுத்த, நீ நம்பிட்ட நான் எடுத்துக்கிட்ட’ போன்ற வசனங்கள் மனதில் நிற்கும் படி இருப்பது பிளஸ்
  • படத்தில் இதர நடிகர்களின் தேர்வும் அருமை

மைனஸ் :

  • 100% காமெடி மசாலா என்று சொல்லிவிட முடியாது.
  • படம் முழுதும் நயன்தாராவை ஒரு மாடர்ன் அம்மனை போல காண்பித்து இருப்பது கொஞ்சம் லாஜிக் மீறல் போல தொன்றுகிறது. அது சரி, இது 100 % அம்மன் படம் இல்லையே
  • போலிச் சாமியாராக அஜய் கோஷ். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு அதிக செயற்கையாக இருக்கிறது.
  • படத்தின் பாடல்கள் அனைத்துமே வேகத் தடைதான். எல் ஆர் ஈஸ்வரி பாடலை தவிர.
  • முதல் பாதியில் இருந்த கலகலப்பு, இரண்டாம் பாதியில் பெரும்பாலும் காணாமல் போகிறது.

இறுதி அலசல் :

கடவுள் என்பது யார், மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும், போலிச் சாமியார்கள் கடவுள் பெயரை வைத்து என்ன செய்கிறார்கள் என்பது தான் படத்தின் ஒன் லைன்.அம்மன் படம் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கவலை படும் அம்மாக்கள் இந்த படத்தை ஜாலியாக குடும்பத்துடன் கண்டு களிக்கலாம். நயன்தாராவிற்காக படம் பார்க்கும் ரசிகர்கள் லாஜிக் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு நயனை அம்மனாக பார்க்காமல் ஒரு ஜாலியான படமாக கண்டிப்பாக பார்க்கலாம். மொத்தத்தில் மூக்குத்தி அம்மனின் அருள் இந்த படத்திற்கு இன்னும் கொஞ்சம் கிடைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 6.5 / 10 . நயன் மற்றும் ஆர் ஜே பாலாஜிக்காக.

Advertisement