லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தாய்மை குறித்து ஒரு பேட்டியில் பேசி இருக்கும் விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடிஸ் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதற்கு இடையே நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தது குறித்து சமூக வலைதளத்தில் அறிவித்த போதே, இணையவாசிகள் கடுமையாக இவர்களை விமர்சித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தாய்மை குறித்தும் புது தாய்மார்களுக்கு சில டிப்ஸ்களும் கொடுத்திருக்கிறார்.
நயன் பேட்டி :
அதில், ஒரு பெண் தாயானதும் அவருக்கான தனிப்பட்ட நேரம் இருக்க வேண்டும் . உலகத்தில் இருக்க எல்லா தாய்களுக்கும் அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மற்றும் இடம் இருக்க வேண்டும். அவங்களுக்கு அது கண்டிப்பாக தேவையானது. ஆனால், நிறைய அம்மாக்கள் அதை ஒரு குற்றமாக நினைக்கிறார்கள். அவர்களை ஒரு குற்றவாளி என நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் அப்படி செய்யக்கூடாது. அதை எதற்கு என்று நான் சொல்கிறேன். உதாரணத்திற்கு நீங்கள் ரொம்ப சோர்வாக இருக்கிறீர்கள், உங்கள் குழந்தையை எப்போதும் நீங்கள் தான் பார்த்துக் கொள்கிறீர்கள்.

தாய்மை குறித்து :
ஆனால், எல்லாத்துக்குமே ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கிறது. பத்து நாட்கள் நீங்கள் ஒரு வேலையை செய்கிறீர்கள் என்றால் பதினோராவது நாள் நீங்கள் பிரேக் ஆவீர்கள். அப்போது நீங்கள் அந்த ஏமாற்றத்தை உங்களுக்கே தெரியாமல் உங்கள் குழந்தை இடம் காட்டுவீர்கள். பாவம் அந்த குழந்தைகளுக்கு அது தேவையில்லாதது. ஏனென்றால், அந்த குழந்தைகளுக்கு தங்கள் அம்மாக்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது. அவங்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது என்பது அந்த குழந்தைகளுக்கு தெரியாது.
நயன் கொடுத்த டிப்ஸ் :
ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதால் தனது அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று எல்லாம் குழந்தையால் புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் நான் சொல்கிறேன். அம்மாக்கள் தங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு சக்சஸ் ஃபுல்லான கேரியர் இருக்க வேண்டும். அம்மாக்கள் அவர்களின் குழந்தைகளுக்காக எதையும் தியாகம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் என் குழந்தைகளுக்காக எதையும் தியாகம் செய்ய விரும்பவில்லை. நான் அவர்கள் கூட இருக்கணும் என்று நினைக்கிறேன்.

நயனை விமர்சிக்கும் இணையவாசிகள்:
அவர்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்காக எப்போதும் இருக்கணும் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு சக்சஸ்ஃபுல் கேரியரும் வேண்டுமென்று நினைக்கிறேன் என்று பேசியுள்ளார். தற்போது நயனின் இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நீங்க இதை சொல்லலாமா. நயன் நீங்கள் தாய்மை பற்றி பேசுவதற்கு தகுதியானவர் கிடையாது என்று நயன்தாராவை கடுமையாக விமர்சித்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.






