ஷூட்டிங் ஸ்பாட்டில் மௌன ராகம் பேபி கிர்த்திகா செய்யும் அட்டகாசத்தை பாருங்க. வைரலாகும் வீடீயோ.

0
7202
Mounaragam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌன ராகம். இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர். இந்த சீரியல் வங்காளி மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடரில் தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார். அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி. இவள் 7 வயது சிறுமி. அவரது அம்மா மற்றும் தாய்மாமனின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

தன் தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் பல அவமானங்கள் ஏற்படுகிறது. தன் தந்தையை காண சென்னைக்கு வருகிறார். பின் தன் தாய் மல்லிகா இறந்து விடுகிறார் என்று கூறப்படுகிறது. பின் தன் தந்தையுடன் சேர்ந்து . இருக்கிறார் சக்தி. ஒரு கட்டத்தில் தன் தந்தை யார் என்று கண்டுபிடிக்கிறார். கார்த்திக்கும் தன் மகளை கண்டுபிடிக்கிறார். இதற்கிடையே கார்த்திக் காதம்பரி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இறுதியில் கார்த்தி மல்லிகா உடன் வாழ்கிறாரா? காதம்பரி உடன் வாழ்கிறாரா? என பல திருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடர்கிறது. இந்த தொடரில் கார்த்திக் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் ராஜீவ் நடிக்கிறார்.

- Advertisement -

ராஜீவ் கேரளாவை சேர்ந்தவர். இவர் முதன் முதலாக விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார். அதற்கு பின் தான் இவருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஸ்வயம்வர பந்தல் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் மலையாள படத்தில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். இவர் கொஞ்ச நாள் இடைவெளி எடுத்துக் கொண்டார். மீண்டும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் காசு பணம் துட்டு என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற தொடரில் சக்திக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜுவும் அவரது சீரியல் மகள் உடன் இணைந்து செய்த காமெடி வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து ஷர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement