கண்ணம்மாவை தொடர்ந்து சக்தி கையிலும் பையை கொடுத்து ரோட் ரோடாக சுற்ற வைக்கும் சீரியல் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
394
barathi
- Advertisement -

சமீப காலமாகவே சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங் புதுப்புது வித்தியாசமான, கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வருகிறது. அதில் ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார்.

-விளம்பரம்-

கண்ணம்மாவாக பாரதியாக ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தேவி அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் ட்ரோல்:

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். ஏன்னா, சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது இதே கான்செப்ட்டில் மௌனராகம் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மௌனராகம் 2 சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுக்கும் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம் 2. மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கொரோனா லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் சில மாதம் கழித்து மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது. மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான் கதைக்களத்துடன் போய்க் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

கண்ணம்மாவை போல் கிளம்பிய சத்தியா:

வருண், சத்யாவிடம் சண்டை போட்டு கோபித்துக் கொள்கிறார். இதனால் மனமுடைந்த சத்யா வீட்டை விட்டு வெளியேறுகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா எப்படி பேக்கை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாரே, அதே கான்செப்டில் மௌனராகம் சீரியலில் தற்போது சத்தியா வெளியேறி இருக்கிறார். இதை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வெளியேறியதற்குப் பிறகு பிறகு தான் சீரியல் டிஆர்பிஎல் பயங்கரமான உச்சத்தை தொட்டது.

வைரலாகும் ட்ரோல்ஸ்:

ஆகவே, அந்த கான்செப்ட்டை மௌனராகம் சீரியலில் கொண்டு வந்தால் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் என்று நினைத்து இதை செய்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால், அதே காட்சியை மௌனராகம் சீரியல் ஒளி பரப்பி வருகிறது. இதனால் மௌனராகம் 2 சீரியல் டிஆர்பி யில் உச்சத்தில் இருக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement