சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு.! விமர்சனம் இதோ.!

0
1489
- Advertisement -

சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘மிஸ்டர் லோக்கல் ‘ திரைப்படம். தமிழ் சினிமாவில் காமெடி படங்களை மட்டுமே எடுக்கும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

மனோகராக வரும் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் விற்னையாளராக வருகிறார். மேலும், நயன்தாரா டிவி தொலைக்காட்சிகளை தயாரித்து வரும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். நயன்தாராவை பல படத்தில் பார்த்தது போல இந்த படத்திலும் ஆண்களுக்கு அடங்காத ஒரு தைரியமான பெண்மணியாக வருகிறார் நயன்.

சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ராதிகா அணைத்து அம்மக்களை போல சீரியல் பைத்தியமாக இருந்து வருகிறார். இதனால் சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். தனது அம்மாவின் இந்த மிகப்பெரிய ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.

-விளம்பரம்-
Image result for mr local

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது அம்மாவுடன் பைக்கில் செல்லும் போது நயன்தாரா காரில் மோதிவிடுகிறார் சிவா, அந்த நொடியில் இருந்து சிவா மற்றும் நயனுக்கும் மோதல் ஏற்பட்டு விடுகிறது. அதன் பின்னர் இவர்கள் மோதல் எப்படி காதலாக மாறுகிறது என்பது தான் மீதி கதை.

ப்ளஸ் :

படத்தில் ப்ளஸ் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ரோபோ சங்கரின் காமெடி கொஞ்சம் ஆறுதல். அதே போல படத்தில் ஆங்காங்கே வரும் அஜித் ரெபரென்ஸ் வசனங்கள் ரசிகர்களின் கை தட்டைலை பெறுகிறது.

மைனஸ் :

சிவா என்றாலே படத்தில் நிச்சயம் காமெடிகள் நிறைந்திருக்குக்கும் ஆனால், இந்த படத்தில் அதனை தேட வேண்டியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட மன்னன் பட கதை தான் என்றாலும் அதனை 10 சதவீதம் கூட கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர். படத்தின் இசையும் கைகொடுக்கவில்லை.

இறுதி மதிப்பு:

சீமாராஜா என்ற தோல்வி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் முதல் படம் இது. ஆனால், இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியுள்ளது என்பது தான் உண்மை. இந்த படத்திற்கு நமது மதிப்பு 4.5/10.

Advertisement