எம்எஸ்வி போட்ட மெட்டை மீண்டும் ஹிட் கொடுத்த இளையராஜா- எந்த படம்ன்னு தெரியுமா?

0
68
- Advertisement -

எம் எஸ் வி பாடலை மீண்டும் இளையராஜா ஹிட் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. மேலும், ஏ ஆர் ரகுமான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு வரை இவருடைய கொடி தான் பறந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இளையராஜாவின் இசை இருந்தாலே அந்த படம் ஹிட்டாகி விடும் என்ற நிலைமை ஒரு காலத்தில் இருந்தது. இந்த நிலையில் எம் எஸ் வி-இளையராஜா கூட்டணியில் வெளிவந்த பாடல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மெல்லத் திறந்தது கதவு படம்:

அதாவது, எம் எஸ் வி, இளையராஜாவுடன் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைத்து இருந்தார். அந்த படம் மெல்லத் திறந்தது கதவு. 1986 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மோகன், அமலா, ராதா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என்று இயக்குனர் சுந்தர்ராஜன் கேட்டிருந்தார். அதற்கு இளையராஜா, நானும் எம் எஸ் வி அண்ணாவும் சேர்ந்து தான் இசையமைப்போம் சம்மதமா? என்று கேட்டார்.

இளையராஜா-எம்எஸ்வி கூட்டணி:

இதைக் கேட்டவுடன் சுந்தர்ராஜன் சந்தோஷத்தில் ஓகே சொல்லிவிட்டார். இளையராஜா, எம் எஸ் வி இடமும் சம்மதம் வாங்கி விட்டார். அந்த சமயத்தில் எம் எஸ் வி கடன் பிரச்சனையில் சிக்கி இருந்ததால் அவருக்கு கை கொடுக்கும் விதமாக இளையராஜா இதை செய்திருந்தார். பின் அந்தப் படத்தினுடைய பாடலுக்கு இசையமைக்கும் போது இளையராஜா, அண்ணா உங்க குருநாதர் சி ஆர் சுப்புராமனின் வான்மீதிலே என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல ஒரு டியூனை கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

-விளம்பரம்-

பாடல் உருவான விதம்:

அதற்கு எம்எஸ்வி, அந்த பாடலை அவர் உருவாக்கவில்லை. நான் தான் உருவாக்கினேன். அந்த படம் பாதி முடியும் முன்பே சுப்புராமன் இறந்துவிட்டார். படத்தினுடைய தயாரிப்பாளர் என்னை கேட்டதால் அவர் விட்டுச் சென்ற பணியை நான் செய்தேன். அந்த பாடலை நான் தான் உருவாக்கினேன் என்று கூறியிருந்தார். உடனே இளையராஜா, அப்படியா அண்ணா என்று ஆச்சரியத்துடன் கேட்டு அதே போல ஒரு டியூனை நானும் உருவாக்குகிறேன் என்று சொன்னார்.

பாடல் குறித்த தகவல்:

அந்த பாடல் தான் ‘மெல்ல திறந்தது கதவு’ படத்தில் இடம்பெற்ற ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே’ என்ற பாடல். இந்த பாடலை வாலி எழுதி இருந்தார். எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி பாடியிருந்தார்கள். இந்தப் பாடலில் சின்ன சின்ன மாற்றங்கள் ரெண்டு முறை வரும். அதில் ஒரு முறை எஸ்பிபி பாட ஜானகி ஹம்மிங் மட்டும் கொடுத்திருப்பார். அதற்கு பிறகு இரண்டாவது முறை எஸ் ஜானகி முழுவதுமாக பாடியிருப்பார். இந்த பாடல் இன்றும் 2கே கிட்ஸ் மத்தியிலும் கூட கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

Advertisement