முகவரி படத்தில் 4 நாட்கள் நடித்த விஜய் பட ஹீரோயின் – பாதியிலேயே தூக்கிய இயக்குனர். காரணம் இது தானாம்.

0
1133
mugavari
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்குள் எத்தனையோ பட வாய்ப்புகள் கைமாறி இருக்கிறது. அதே போலத்தான் நடிகைகளும், அந்த வகையில் துரை இயக்கத்தில் அஜீத் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான முகவரி படத்தில் ஜோதிகாவிற்கு முன்னர் நடிக்க வேண்டியது விஜயுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த இஷாகோபிகர் தான்.தமிழில் துரை இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியான முகவரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு தரமான படமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த படம் துரைக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is mugavari.jpg

இந்த படத்தை தொடர்ந்து காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற பல்வேறு படங்களை இயக்கிய துரை இறுதியாக சுந்தர் சி யை வைத்து இருட்டு என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார். சமீபத்தில் முகவரி படம் வெளியாகி 20 வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் துறை.அதிலும் குறிப்பாக ஜோதிகா இந்த படத்தில் எப்படி வந்தார்கள் என்பதை கூறியுள்ளார்.

- Advertisement -

அந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர், இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக இஷா கோபிகர் தான் கமிட்டாகி இருந்தார்கள். அவர்களை வைத்துதான் முதல் நான்கு நாள் ஷூட்டிங்கும் ஆரம்பித்தோம். அஜித்திற்கு நான்கு நாட்கள் கழித்துதான் ஷூட்டிங் இருந்தது. முதல் மூன்று நாள் எடுத்த காட்சிகளை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு நல்லா இருக்கிறது இப்படியே போயிடலாம் என்று சொன்னா.ர் ஆனால் எனக்கு ஹீரோயின் செட் ஆகாமல் இருப்பது போன்று தோன்றியது.

இதைப்பற்றி நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன், என்னப்பா இப்போ வந்து இப்படி சொல்ற அப்படின்னு ஷாக் ஆனார். பின்னர், சார் அவர்கள் நன்றாகத்தான் நடிக்கிறார்கள் ஆனால், இந்த கதாபாத்திரத்திற்கு அவர்கள் சரியில்லாத மாதிரி இருக்கிறது என்று சொல்லி ஜோதிகாவை நான் தான் கமிட் செய்தேன். ஜோதிகா நடித்த முதல் நாள் ஷூட்டிங்கை பார்த்து தயாரிப்பாளரும் என்னுடைய முடிவு சரிதான் என்று பாராட்டினார்கள் 3என்று கூறியுள்ளார் துறை.

-விளம்பரம்-
Advertisement