அட, அப்போதே மஹாபாரதம் செட்டில் ஏர் கூலர் பயன்படுத்தபட்டதா? சக்திமான் விளக்கம்.

0
1368
maha
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
மாகாபாரத செட்டில் ஏர் கூலரா? விளக்கம் அளித்த நடிகர் முகேஷ் கண்ணா

கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இது வெள்ளித் திரைக்கு மற்றும் இன்றி சின்னத் திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல டிவி சேனல்கள் ஏற்கனவே ஒளிபரப்பு செய்த டிவி சீரியல்களை, மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தூர்தர்ஷன் சேனலில் ‘மகாபாரதம்’ சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இந்த டிவி சீரியல் ஏற்கனவே 1988-ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பி.ஆர்.சோப்ரா – ரவி சோப்ரா இணைந்து இந்த சீரியலை இயக்கியிருந்தனர். இதில் பிரபல நடிகர் முகேஷ் கண்ணா பீஷ்மராக வலம் வந்திருந்தார்.

-விளம்பரம்-

இப்போது இந்த சீரியலில் முகேஷ் கண்ணா நடித்திருக்கும் ஒரு காட்சியில், அவருக்கு பின்னால் ஏர் கூலர் இருப்பது போன்ற ஒரு ஸ்டில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ், “அடடா அப்பவே பீஷ்மர் ஏர் கூலர் பயன்படுத்தியிருக்கிறார்” என்ற ரீதியில் மீம்ஸ் போட்ட வண்ணமிருந்தனர். சிலர் “அது அந்த செட்டில் இருக்கும் ஒரு தூணின் டிசைன்” என்றும் கூறி வந்தனர்.

ஆனால், அதையும் மறுத்து சரியான புகைப்படங்களை வெளியிட்டு ஆதாரத்துடன் நிரூபித்தனர் நெட்டிசன்ஸ். தற்போது, இது தொடர்பாக அக்காட்சியில் நடித்திருந்த நடிகர் முகேஷ் கண்ணா பேசுகையில் “மகாபாரதம் சீரியலில் வந்த ஒரு காட்சியில் இடம்பெற்ற ஏர் கூலர் தொடர்பாக வைரலாக பரவி வரும் மீம்ஸ்களை நான் பார்த்தேன். நிஜமாகவே அந்த புகைப்படம் ‘மகாபாரதம்’ செட்டில் இருந்து தான் எடுக்கப்பட்டதா என்று எனக்கு மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், இயக்குநர் பி.ஆர்.சோப்ரா மிகவும் கவனமாக இருப்பார்.

இருப்பினும் இது போன்ற தவறுகள் எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. மேலும், ‘மகாபாரதம்’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏர் கூலரை நாங்கள் பயன் படுத்தினோம். மிக கடினமான காஸ்டியூம், நீண்ட தாடி என எனது கெட்டப் இருந்ததால், எனது ஷாட் முடிந்ததும் எப்போதும் வேர்வையுடன் தான் போய் உட்காருவேன். அதனால், ஏர் கூலர் வேண்டும் என்று நான் தான் இயக்குநர் பி.ஆர்.சோப்ராவிடம் சொன்னேன். அவரும் அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்” என்று நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.

Advertisement