கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. மேலும், இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
அமரன் படம்:
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருந்தது. இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் கூட, அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பாராட்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கௌரவித்து இருந்தது.

அமரன் இறுதி வசூல்:
இந்த பயிற்சி மையத்தில் தான் முகுந்த் வரதராஜன் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமரன் படம் முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்து கொண்டிருந்தது. சிவகார்த்திகேயனுடைய பெஸ்ட் திரைப்படமாக அமரன் மாறியிருக்கிறது. உலக அளவில் இந்த படம் 339 கோடி வசூல் செய்தது. அது மட்டும் இல்லாமல் 2024 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை அமரன் படம் தான் பிடித்திருக்கிறது.

முகுந்த் குடும்பம்:
இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடைய திரை பயணமே மாறியிருக்கிறது. அதோடு இந்த படத்தினுடைய ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் அவர்கள் கலந்துகொண்டு பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். அதுமட்டுமில்லாமல் அமரன் படத்தையும் தன்னுடைய மகளுடன் சேர்ந்து பார்த்திருந்த வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு முகுந்த் வரதராஜனின் அப்பா, அம்மாவும் அமரன் பேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

முகுந்த் அம்மா சொன்னது:
அந்த வகையில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முகுந்த் வரதராஜன் அம்மா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், அமரன் படத்தை எடுக்க வேண்டாம் என்று நான் சொல்லியிருந்தேன். காரணம், என்னுடைய மகனுடைய நினைவு வந்து கொண்டே இருக்கும். அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதனால் தான் படமே எடுக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான் என்னை சம்மதிக்க வைத்து படம் எடுத்தார் என்று கூறியிருக்கிறார்.






