தல, நம்ம பாட்லயே கைவைக்குறான் – வெறித்தனம் பாடலை பயன்படுத்திய Mi அணி. Csk கொடுத்த மாஸான பதில்.

0
3646
verithanam
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஐபிஎல் தொடர் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இன்னும் 20 நாட்களுக்குள் தொடங்க உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாட்டில் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியின் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்துள்ளனர். மேலும் போட்டிகளில் பங்கேற்பதர்க்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக சுயமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் நிர்வாகத்தால் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையிலான ட்விட்டர் விளம்பரங்களும் முழு வீச்சில் நடைபெறத் தொடங்கி விட்டது.சென்னை அணி ஏற்கனவே அரபு நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் சென்னை அணியை சேர்ந்த சில வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது ஒருபுறமிருக்க சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவும் தனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறப் போவதில்லை என்று கூறி நாடு திரும்பி விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணியான மும்பை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தது. அதில், அந்த வீடியோவில் மும்பை அணியின் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து சில ஹைலைட்ஸ் காட்சிகளைத் தொகுத்து வழங்கி இருந்தது. மேலும் இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் பாடலையும் பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு மாஸ் காட்டி இருந்தது.

பொதுவாக Csk அணி தான் தமிழ் பாடல்களையும் வசனங்களையும் உரிமை கொண்டாடும். ஆனால், மும்பை அணி இப்படி தமிழ் பாடலை உரிமை கொண்டாடியதை கண்டு ரசிகர் ஒருவர், என்று பதிவிட்டு Csk அணியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள Csk அணி, ரஜினியின் பாட்ஷா பட ஸ்டில் ஒன்றை போட்டு ‘வைக்கட்டும்’ என்று பதில் கூறியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement