தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் பார்க்கப்போவது 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து பல்வேறு இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை உன்னி மெரி குறித்து தான் பார்க்கப்போகிறோம். தமிழ் சினிமாவில் கடந்த 1975ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான அந்தரங்கம் என்ற படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகையான உன்னி மெரி.
இவர் 1962 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்களின் பெயர் ஆகஸ்டின் பெற்நாண்டஸ் மாற்றும் விக்டோரியா ஆகிய இரண்டு பேருமே நடன1கலைஞ்சர்களாவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினி ,கமல், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : பிகில் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைப் பெற்ற சிறுவன் – விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.
இவர் ரஜினி நடித்த ஜானி,ஜெய் சங்கர் நடித்த ரோசாபூ ரவிக்கைகாரி போன்ற படங்களில் காதனையாகியாகி நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டும் 25 படங்களுக்கு மேலே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தனது 3 வயத முதலே பாரத நாட்டிய கலையை கற்றுவந்த இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.இவரது அம்மா விக்டோரியா பேய்லே டான்சர் பள்ளி ஒன்றை நடத்திவந்தார் அந்த குழுவின் பல நிகழ்ச்சிகளிலும் உன்னமேரி பங்கேற்று நடனமாடியுள்ளார்.
அந்த காலத்தில் கனவுக் கன்னியாக திகழ்ந்த இவர் நீச்சல் உடைகளில் கூட நடித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிர்மல் என்ற ஒரு மகனும் உள்ளார்.சில மாதங்களுக்கு முன்னர் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடடிய உன்னி மேரி . கடந்த 10 ஆண்டுகளாக.சினிமாவில் நடிக்கவில்லை மேலும் இனிமேல் தான் சினிமாவில் நடிக்கப்போகும் எண்ணம் தமக்கு வந்ததில்லை என்றும் கூறியுள்ளர் உன்னி மேரி.