தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே போல விஜய்க்கு 90ஸ் காலகட்டம் முதல் தற்போது வரை பல சுட்டிஸ்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதனாலேயே விஜய்யின் என்டரி பாடல்களில் சிறுவர்கள் நிச்சயம் இடம்பெற்று விடுவார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தை காண்பித்து 10 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ள சுவாரசியமான சம்பவம் நடைபெற்று இருந்தது.
தெறி மற்றும் மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாம் முறையாக விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவான ‘பிகில்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் விஜய் அப்பா மகன் என்று இரண்டு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : நிறைவடைந்த மாநாடு படத்தின் ஷூடிங் – படக்குழுவினர் அனைவருக்கும் படத்திற்கு தொடர்புடைய பொருளை பரிசாக அளித்துள்ள சிம்பு,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த சிறுவன் பைக்கிலிருந்து கீழே விழுந்து இருக்கிறார். இதில் அந்த சிறுவனுக்கு நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுவனுக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் தையல் போட டாக்டர்கள் முயன்று இருக்கிறார்கள்.
ஆனால், அந்த சிறுவன் தொடர்ந்து அடம்பிடித்து இருக்கிறான், இதனால் அந்த சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதும் எனக்கு விஜய் தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியதும் விஜய் நடித்த பிகில் படத்தை செல் போனில் காண்பித்து இருக்கின்றனர். வலியை மறந்த சிறுவன் மெய் மறந்து பிகில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஊசி போட்டு அதன் பின்னர் தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், காயம்பட்ட சிறுவன் சசிவர்ஷனை நேரில் அழைத்து பேச நேரம் ஒதுக்கியுள்ளார் விஜய். உடல்நிலை சரியானதும் சிறுவனை நடிகர் விஜய் சந்திப்பார் என விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.