30 வருட கொலை வழக்கில் ஹரியாணா நடிகர் கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காவல் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹரியாணா நடிகர் ஓம்பிரகாஷ் என்கிற பாஷா. இவர் ஹரியானாவின் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். தற்போது இவருக்கு 65 வயதாகிறது. இவர் இந்திய ராணுவத்தின் முன்னாள் ஊழியர். 30 ஆண்டுகளாக கொள்ளை மற்றும் கொலை குற்றச்சாட்டு தொடர்பாக இவரை ஹரியாணா காவல்துறை தேடி வந்தது. ஆனால், இவர் அண்டை மாநிலம் உத்திரபிரதேசத்தில் புதிய அடையாளத்துடன் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து வந்திருந்தார்.
அவர் அங்கு அதிகாரப்பூர்வமாக புது ஆவணங்களை எல்லாம் தயார் செய்து அந்த ஊர் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது. இவர் டிரக் ஓட்டுவது, மத நிகழ்வுகளில் பக்தி பாடல்களை பாடுவது, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 28 உள்ளூர் படங்களில் நடிப்பது போன்ற பல வேலைகளை செய்து கொண்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காசியாபாத் நகரில் உள்ள ஒரு நகர்ப்புற குடிசைப் பகுதியில் இவரை போலீஸ் கைது செய்திருக்கிறது.
உதவி ஆய்வாளர் விவேக் குமார் அளித்த பேட்டி:
இந்நிலையில் அவரை கைது செய்த சிறப்பு அதிரடிப்படையின் உதவி ஆய்வாளர் விவேக் குமார்
கூறியிருப்பது, 1992 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் ஓம்பிரகாஷ் உடந்தையாக இருக்கிறது. நாங்கள் ஓம் பிரகாஷ் வசித்து வந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு இருக்கும் அவருடைய குடும்பத்திடம் விசாரித்தோம். அவருக்கு ராஜ்குமாரி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகள் இருக்கிறது. அவருடைய கணவன் மீதான குற்றச்சாட்டுகளை ராஜ்குமாரியுடன் காண்பித்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் அவர் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறியிருந்தார்.
ஓம்பிரகாஷ் பற்றிய தகவல்:
அதுமட்டுமில்லாமல் ஓம் பிரகாஷ் ஏற்கனவே ஹரியானாவில் திருமணமாகி குடும்பம் நடத்தி இருக்கிறார். அது தெரியாமல் 1997 ஆம் ஆண்டில் ராஜகுமாரியை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. மேலும், ஹரியாணா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் இருக்கும் நரைனா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் ஓம் பிரகாஷ். இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் 12 ஆண்டுகளுக்கு ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பின் 4 ஆண்டுகள் வேலையில் இல்லாததால் அவரை 1988-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். கொலைக் குற்றத்திற்கு முன்பாகவே ஓம் பிரகாஷ் மீது பல குற்றங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஓம்பிரகாஷ் மீதான குற்றம்:
இவர் கார், மோட்டார் பைக், தையல் இயந்திரம் மற்றும் ஸ்கூட்டர் என பல பொருட்கள் திருடியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றங்கள் எல்லாம் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்தது. அதில் சில வழக்குகள் பதிவு செய்து அவர் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் 1992ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ், மற்றொரு நபரும் பைக்கில் பயணித்த ஒருவரிடம் திருட முயன்றிருக்கிறார்கள். அப்போது அந்த நபர் இவர்களை எதிர்த்திருக்கிறார். ஆனால், அவரை கத்தியால் குத்திவிட்டு ஓம் பிரகாஷ் தப்பித்துவிட்டார். இன்னொரு நபர் பிடிபட்டு ஏழு, எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
தப்பித்த ஓம்பிரகாஷ்:
ஆனால், ஓம் பிரகாஷை தேடியும் போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு பிறகுதான் அவரை தேடப்படும் குற்றவாளி என காவல்துறை அறிவித்தது. அவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் எல்லாம் அதிகரித்தது. தப்பித்துச் சென்ற ஓம்பிரகாஷ் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றின் கோவில்களில் தஞ்சம் புகுந்து இருந்தார். பின் ஓர் ஆண்டுகள் கழித்து தான் இவர் வட இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார். அதற்கு பின்பு காசியாபாத்தில் தங்கி லாரி ஓட்டும் வேலையை பார்த்து இருக்கிறார். அங்கேயே இருந்து அந்த ஊர் பெண் ராஜகுமாரியை திருமணம் செய்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்.
நடிகரான ஓம்பிரகாஷ்:
இவர் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். கிராமத் தலைவராக, வில்லனாக, போலீஸ் கான்ஸ்டபிள் என பல வேடங்களில் நடித்து இருக்கிறார். இவ்வளவு செய்தும் அவர் தன்னுடைய ஆவணங்களில் பெயரை மட்டும் மாற்றவில்லை. இதுதான் இவரை போலீசில் சிக்கவைக்க காரணமாக இருந்தது. இதையடுத்து கைதான ஓம்பிரகாஷுக்கு தண்டனையை நீதிமன்றம்தான் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.