தமிழ் சினிமாவில் ஒரே இயக்குனரை வைத்து பல படங்களை எடுத்த ஹீரோக்கள் உள்ளனர். அந்த வகையில் அஜித்திற்கு, சிவா என்றால் விஜய்க்கு முருகதாஸ். தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் 2018-ம் ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு உள்ள இயக்குநர் என்ற விருது ஏ.ஆர். முருகதாசுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பொது துப்பாக்கி 2 படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படம் நிச்சயம் வரும் என்று பதிலளித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத் தொடர்ந்து கபாலி படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘நான் கோட் சூட் போடுறது தான் உங்களுக்கு பிரச்னைனா நான் கோட் சூட் போடுவேன் டா, ஸ்டைலா கெத்தா’ என்ற வசனத்தை வைத்து விஜய்க்காக உருவாக்கப்பட்டிருந்த மீம் திரையிடப்பட்டது.
இதையும் படியுங்க : துப்பாக்கி 2 அல்லது கத்தி 2..!முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..!அவரே சொன்ன தகவல்..!
அந்த மீம்மில் ‘விஜய் சார் கூட படம் பண்றது தான் உங்களுக்கு பிரச்னைனா.. இன்னும் 10 படம் கூட பண்ணுவேன் டா.. ஸ்டைலா .. கெத்தா..’ என்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதை பார்த்த முருகதாஸ் இது மீம் போல் தெரியவில்லை என் மைண்ட் வாய்ஸ் போல் தெரிகிறது என்றார். இதை கேட்ட ரசிகர்கள் அரங்கத்தை அதிர வைத்தனர்.
மேலும், ரஜினிகாந்துடன் இணையவிருக்கும் படம் குறித்த பேசிய முருகதாஸ், ரஜினி ரசிகன் என்ற முறையில் அது எனது கனவுப்படமாக இருக்கும். படத்தில் அரசியல் இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஒரு மாஸ் படமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். பின்னர் பறை இசைத்து அரங்கத்தில் இருந்த அனைவரையும் மகிழ்வித்தார்