90ஸ் கிட்ஸ்களுக்கு அனியும் இவர் தான் யுவனும் இவர் தான் – SA ராஜ்குமாரின் பிறந்தநாள் இன்று.

0
1382
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையில் புகழின் உச்சத்தில் இருந்த எஸ் ஏ ராஜ்குமாரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கூறி வரும் வாழ்த்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் எஸ் ஏ ராஜ்குமார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். ஆனால், இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். இவருடைய தந்தையும் ஒரு மேடை பாடகர் தான். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகுதான் ராஜ்குமாருக்கும் இசையின் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பின் இவர் சுப்பையா பாகவதரிடம் முறையாக இசைப் பயிற்சி மேற்கொண்டார். அதற்கு பிறகு 1987 ஆம் ஆண்டு வெளிவந்த சின்னப்பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

எஸ்.ஏ ராஜ்குமார் இசைப்பயணம்:

இவர் புதுவசந்தம்- பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா, மனசுக்குள் மத்தாப்பு, குங்குமக்கோடு, புதுப்புது ராகங்கள், விஜய் நடித்த பூவே உனக்காக, புரியாத புதிர், வீரன் வேலு தம்பி, இன்னிசை பாடிவரும் இளங்காற்று உருவம் இல்லை, சூரிய வம்சம்- ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, பிரியமானவளே, அஜித் நடித்த அவள் வருவாளா, ராஜா, பிரியாத வரம் வேண்டும், வானத்தைப்போல, பிரியமான தோழி, தங்கத்தின் தங்கம், பெண்ணின் மனதை தொட்டு போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இப்படி இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

எஸ்.ஏ ராஜ்குமார் இசை திறமை:

அது மட்டும் இல்லாமல் இவருடைய பாடல் என்றே ஒரு தனித்துவம் பெற்று இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்ரமனின் படத்தில் இசையமைப்பாளர் என்றால் இவரை தான் சொல்வார்கள். சொல்லப்போனால் இளையராஜாவின் பாடல்களுக்கு இணையாக எஸ்ஏ ராஜ்குமார் உடைய பாடல்கள் கிராமங்களில் ஒலித்துக் கொண்டிருந்தது. டி ராஜேந்திரன் போல இவரும் ஒரு கவிஞனாக இருப்பதால் இவர் இசையமைத்த படங்களில் பெரும்பாலான பாடல்களை இவரே எழுதி இருக்கிறார். மேலும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக 36 படங்களுக்கு இசையமைத்து சாதனையும் புரிந்திருக்கிறார்.

-விளம்பரம்-

எஸ்.ஏ ராஜ்குமார் செய்த சாதனை:

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 250 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். அதோடு கவிஞர் யுகபாரதியை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியதும் இவர்தான்.இவரை மட்டும் இல்லாமல் பல பாடல் ஆசிரியர்களை அறிமுகம் படுத்தி வைத்திருக்கிறார். இளையராஜாவிற்கு பிறகு ஒரு ஆண்டிற்கு 14 படங்களுக்கு இசையமைத்து கொடுத்து பிசியான இசையமைப்பாளராக இருந்தவர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

இவருடைய பாடல்கள் எல்லாம் மெய்மறந்து உறங்க வைக்கும், இல்லையென்றால் உறைய வைக்கும். அந்த அளவிற்கு இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை ராஜ்குமார் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் லாலா என்ற ஹம்மிங்கை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்ததே இவர் தான். இப்படி தென் இந்திய சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த எஸ்ஏ ராஜ்குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவர் தன்னுடைய 59 வது வயதில் அடி எடுத்து வருகிறார். இசை உள்ளவரை எஸ்ஏ ராஜ்குமார் உடைய பாடல்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். இன்று இவர் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement