சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரை பரிசோதிக்க அந்த ஊர் மண் தேர்வானது எப்படி? முழு விபரம் இதோ!

0
1024
- Advertisement -

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரோ கடந்த 14ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற விக்ரம்லேன்டர் இன்று மாலை ஆறு மணிக்கு நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும்னு இஸ்ரோ அறிவித்து இருந்தது. ஆனால் சில நாட்களாக அது தேதி மாற்றி நிலவிறக்கபடும் என்ற வதந்திகளும் பரவியது ஆனால் இஸ்ரோ அதை மறுத்தது. இந்த ஒரு தருணத்தை இந்தியாவில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

-விளம்பரம்-

சந்திரயான் 3 ஒரு பகுதியாக விக்ரம் லேன்டர் தரை இறங்கி ஆய்வு செய்வத பரிசோதிக்க இஸ்ரோவுக்கு அதே போன்ற மண் தேவைப்பட்டது. அந்த மண் மாதிரி இந்தியாவிலேயே தமிழ்நாட்டுல அதுவும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் இருக்கிறது. 1950ஆம் ஆண்டில்  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சித்தம் பூண்டி மற்றும் குன்னமலை பகுதிகளில் அது போன்ற அனர்தசை வகை பறைகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அனர்தசைட் பறைகள் நிலவு உருவான போது உருவான பறைகள் அதில் கனிமங்கள் இருக்கும் என்ற கோணத்துல அப்போது ஆராய்ச்சிகள் நடந்திருந்தது.

- Advertisement -

அதன் பின் அமெரிக்காவில் இருந்து அனார்த்தசைட்  மண் மாதிரியே அதிக விலை கொடுத்து வாங்க முடிவு செய்தது. அப்போது இதன் திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மூலமாக இந்தியாவுக்குள்ளேயே நிலவின் மாதிரி மண்ணை தேடலாம் என்று அறிவித்தார். இதற்க்காக மும்பை ஐஐடியில் பணியில் இருந்த இருந்த புவி தகவல் கோளியல் மை ஆராய்ச்சியாளர் அன்பழகன் என்றவரை டீம் மற்றும் இஸ்ரோ மண் சார்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுல கடந்த 2004 ஆம் ஆண்டு சித்தம் பூண்டி கிராமத்தில் இருக்க மண்னை ஆராய்ச்சிகள் செய்தனர்.

2013 வரைக்கும் சித்தம் பூண்டிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளை 99 சதவிகிதம் ஒத்து போனது என்றும், சேலத்தில் இருக்கும் ஒரு குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அளவுக்கு இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் 2 விண்கலத்தை இறக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதன் பிறகு தான் நிலவை நோக்கி அனுப்பினாங்க தற்போது சந்திராயன் 3  விண்கலத்தை அந்த மாதிரி மண்ணில் பலமுறை சோதித்த பிறகு தான் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நிலவு போன்ற மண்ணை சேகரித்து கொடுத்த ஆராட்சியாளர் அன்பழகன் சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் புவி தகவல் மைய இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். நிலவின் தென்திசை பகுதிகளில் அனார்தசைட் பறைகள் உள்ளன. நிலவின் மேற்பரப்பில் இரண்டு வகையான பறைகள் உள்ளது அதுதான் அனார்தசைட் மற்றும் பேசால்ட் வகை பறை என்றும் தெரிவித்தார். இந்தியர்கள் அனைவரும் இன்று மாலை நடக்கபோகும் நிகழ்விற்க்காக ஆவலாக காத்து கொண்டு இருக்கின்றனர்.      

Advertisement