இதற்க்கு முழு பொறுப்பும் அவர் தான் அவரை பார்க்க தான் அவ்வளவு மக்கள் வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடி தான் பெரும் பேசு பொருளாக மாறியது. இது குறித்து அவர் மன்னிப்பும் கோரினார். கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும் போது அதனுடைய முழு பொறுப்பையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் இதுபோன்ற சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதை காண்பதே உண்மையாக இருக்கும் அளிக்கிறது இது குறித்து இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் சங்க தலைவர் கூறியது:
ஞாயிறு அன்று ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியில் நடந்த பிரச்சனைகள் என்னவென்றால் அது நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. ஒரு முறை டிக்கெட்டு புக் செய்து விட்டால் அந்த நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை பார்வையாளராக இருக்கிறார்கள் எத்தனை பேர் உள்ளே வருகிறார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கண்காணித்து இருக்க வேண்டும். இது குறித்து ஏ ஆர் ரகுமானும் கவலை இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த வழியில் நம்முடைய தமிழக முதல்வர் கான்வாய் சென்றது அப்போது அவருக்கு வழி விடவில்லை.
முதல்வருக்கு ஒரு சரியான பாதுகாப்பு இல்லாத போது அங்கு வரும் பொது மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும். இது எல்லாமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரி செய்து இருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் மக்கள் அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பார்களா? அவர்கள் மக்களிடம் பணம் வாங்கி விட்டார்கள் அதன் பின் பார்வையாளர்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற நிலையில் அவர்கள் இருந்துள்ளனர். முதலில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது. இது போன்ற நிகழ்ச்சி இதற்கு பத்தாயிரம் பேர் உள்ளே வருகிறார்கள் அவர்கள் எவ்வாறு வெளியே போவார்கள் என்று ஒரு வரைமுறையும் ஞாயிறு நடந்த நிகழ்ச்சியில் கிடையாது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைத்தையும் தவறாக செய்திருக்கிறார்கள். இது ஏ ஆர் ரகுமானுக்கு மிகப்பெரிய பாடம். ஏ ஆர் ரகுமான் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நானும் ஞாயிறு அன்று நடைபெற்ற கூட்டத்திலிருந்து சின்ன சின்ன குழந்தைகள் வெளியே வர முடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தனர். ஞாயிறு நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு வந்தவர்களுக்கு குடிக்க குடிநீர் கூடஇல்லை ஆனால் ஒவ்வொரு டிக்கெட் விலையும் ஆயிரம் முதல் பதினைந்தாயிரம் 20 ஆயிரம் என்று இருந்தது. கிட்டத்தட்ட ஞாயிறு என்று நடைபெற்று நிகழ்ச்சியில் இருந்து மட்டும் அவர்களுக்கு 20 கோடி ரூபாய் வந்து இருக்கும்.
ஆனால் அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை ஏமாற்றி விட்டனர். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இனிமேல் சரியான வரைமுறை செய்து செய்ய வேண்டும். வெளியில் நடந்தது உள்ளே எங்களுக்கு தெரியவில்லை என்று யாருக்கும் உன் பேச்சு பொறுப்பேற்று பேச்சு. அவரைக் காண தான் அவ்வளவு மக்கள் அங்கு திரண்டனர் அதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். என்றும் இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தீனா கூறினார்.