சமீபத்தில் பிரிந்த தன் மனைவி மீது இமான் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது.
ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார். மேலும், விஸ்வாசம் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்துஇருந்தது . இறுதியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் Bgm களும் பெரும் ஹிட் அடித்தது.
இதையும் பாருங்க : அதான் 4 கார் இருக்கில்ல அப்புறம் ஏன் சைக்கிள்ல போனீங்க, நெல்சனின் குசும்பான கேள்விக்கு விஜய் சொன்ன பதில்.
ஈமான் மனைவி மோனிகா ரிச்சர்ட் :
இசையமைப்பாளர் இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்ன இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்களும் பிறந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தார் இமான்.அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார்.
விவாகரத்து பெற்ற ஓராண்டு கழித்து அறிவித்த இமான் :
இது குறித்து இமான் கூறிய அவர், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.
இமான் வைத்த வேண்டுகோள் :
நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான்.
மனைவி மீது வழக்கு தொடர்ந்த இமான் :
இந்நிலையில் குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து ஏமாற்றி புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதோடு விசாரணையானது ஜூன் 9ஆம் திகதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.