தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.
அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இது குறித்து இமான் கூறிய அவர், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.
இமானின் உருக்கமான பதிவு :
நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான்.
இரண்டாம் திருமணம் :
இந்த நிலையில் தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த உமா என்பவருக்கும் இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இது பெரியவர்கள் பேசி நிச்சயக்கப்பட்ட திருமணம் என்று கூறுகிறார்கள். இமான் வீட்டார் மற்றும் உமாவின் வீட்டார் இதுதொடர்பாக பேசி முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது தொடர்பாக இமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறுகிறார்கள்.
விவகாரத்து குறித்து இமான் :
இப்படி ஒரு ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், விவாகரத்து மிகப்பெரிய விஷயம், எப்போது ஆண் மீதுதான் குற்றம் சொல்வார்கள். ஆனார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க கூடாது என விரும்பினேன். ஆனால் நடந்துவிட்டது, எனது குழந்தைகளை என் மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும், அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என கூறியுள்ளார்.
மருமணத்திற்கு 3 கண்டிஷன் :
மேலும் பேசிய இமான் தனது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள்ளார்.