தனது காதலியை அழகான பதிவால் அறிமுகப்படுத்திய ‘முத்தழகு’ நடிகர் ஆஷிஷ் – யார் என்று பாருங்களேன்

0
44
- Advertisement -

பிரபல சீரியல் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகப்படுத்தி இருக்கும் செய்தி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபகாலமாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் விஜய் டிவியும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘முத்தழகு’.

-விளம்பரம்-

இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் தைரியமாக போராடும் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர்தான் ஆஷிஷ் சக்கரவர்த்தி. பார்ப்பதற்கு படு லூக்காக இருக்கும் இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

- Advertisement -

ஆஷிஷ் குறித்து:

ஆஷிஷ் பிரபல சீரியல் நடிகர் மட்டுமல்லாமல் மாடலும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். மாஸ்டர்ஸ் டிகிரி வரை படித்த இவருக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். முதலில் மாடலிங்கில் தனது கரியரை தொடங்கிய இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் நடத்தப்பட்ட, ‘Mr.India Chennai ‘ டைட்டில் வின்னரும் ஆவார். அதற்குப்பின் நிறைய விளம்பர படங்களில் நடித்த இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சூரியவம்சம்’ சீரியலின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

சூரியவம்சம் சீரியல்:

சூரியவம்சம் ஜீ தெலுங்கில் ஒளிபரப்பான ‘அமெரிக்கா அம்மாயி’ என்ற தொடரை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் நடிகை ‘பூர்ணிமா பாக்யராஜ்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த தொடரில்ஆஷிஷ் சக்ரவர்த்தி கதாநாயகனாகவும், நிகிதா ராஜேஷ் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்கள். இந்தத் தொடர் செப்டம்பர் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

முத்தழகு சீரியல்:

இதனைத் தொடர்ந்து தான் தற்போது ஆஷிஷ் ‘பூமி’ கதாபாத்திரத்தில் ‘முத்தழகு’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒருவரை அம்மா சொன்னதால் கல்யாணம், மற்றொருவர் காதலித்து பிரிந்த சூழ்நிலை காரணமாக செய்த கல்யாணம். இப்படி இரண்டு திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கிறார் பூமி. அதனால் இந்த சீரியல் மீது ரசிகர்கள் பலர் கடும் கோபமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆஷிஷ், சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருப்பவர்.

ஆஷிஷ் பதிவு:

தற்போது இவர் தனது காதலியின் புகைப்படத்தை முதல் முறையாக ஷேர் செய்துள்ளார். அதாவது தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக ஷேர் செய்து அழகான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். மேலும் , அவர் தன்னுடைய வருங்கால மனைவி டாக்டர் காயத்ரி சிவா என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோல் ஆஷிஷ் தனது காதலி பற்றி செய்தியை வெளியிட்டதும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Advertisement