தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கௌண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெண் காமெடியன்களாக நடித்து பிரபமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் சத்தியராஜ் இயக்கி நடித்த ‘வில்லாதி வில்லன்’ படத்தில் இவர் மினிஸ்டர் அம்சவள்ளியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவரது நடிப்பிற்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அதன் பின்னர் இவருக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பேசியது,
நான் பத்தாவது படிச்சிட்டு இருக்கும் போது என்னோட முதல் சினிமா வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, நான் நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலை. ரெண்டாவது படமா எனக்கு அமைஞ்சது `ஜாதி மல்லி’. பாலசந்தர் சார் வாய்ப்புக் கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். ரொம்ப பிஸியா நடிச்சிட்டிருந்த காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிட்டேன். நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் தவிர்த்தேன். அதுக்குக் காரணம் என் திருமணம். 2001 ம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
என்னோட கணவரை முதன் முதலா கேரளாவில் இருக்கிற ரெஸ்டாரன்ட்ல பார்த்தேன். ஜி.எம்.மா வொர்க் பண்ணுனார். ரெண்டு பேரும் பேசிப் பழகுனோம்; பிடிச்சிருந்துச்சு. பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் ஹோட்டல் துறையில் இருந்ததுனால மும்பை, பூனே, பெங்களூருனு ஒவ்வொரு ஊரா வேலை விஷயமா ஷிப்ட் ஆக வேண்டிருந்தது. அதனால, சினிமாவுக்கு குட்பைய் சொல்லிட்டு கணவர்கூட நானும் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். எங்களுக்கு மூணு ஆண் குழந்தைகள் என்று கூறி இருந்தார்.