பிக் பாஸ் சீசன் 6ல் எண்ட்ரியான வைல்ட் கார்டு போட்டியாளர் – அட இவங்க தானா.

0
251
biggboss
- Advertisement -

பிக் பாஸ் வீட்டிற்கு முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ட்ரியாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் தான். இதுவரை இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஆறு நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். இப்படி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்ததால் போட்டியாளர்கள் மத்தியில் சர்ச்சை தொடங்கியது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை. வீட்டில் உள்ள போட்டியாளர்களை நான்கு அணிகளாக பிரித்து வேலைகள் பிரித்து செய்து வருகின்றனர். இதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஆயிஷா,தனலட்சுமி இருவரும் தான் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி இருந்தார்கள். மேலும், சிறப்பாக விளையாடி ஜி பி முத்து, விக்ரமன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து வெளியேறி விட்டனர்.

-விளம்பரம்-

கமல்ஹாசன் சொன்னது:

நேற்றைய எபிசோடில் கமலஹாசன் முதல் வாரத்தில் நடைபெற்ற பல விஷயங்களை குறித்து பேசி இருந்தார். பின் ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றி பாராட்டியும், எப்படி எல்லாம் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. பொதுவாக, நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் வைல்ட் கார்ட் போட்டியாளரை அறிமுகப்படுத்துவார்கள்.

வைல்ட் கார்ட் என்ட்ரி:

இந்த முறை முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே சென்றிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, நம்ம மைனா நந்தினி தான். இன்று அவர் என்ட்ரியாகும் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஜி பி முத்துவின் காமெடியும், அமுதவாணனின் அட்டகாசமும் வீட்டில் கலக்கலாக இருக்கிறது. தற்போது மைனா நந்தினியும் சென்றால் இன்னும் வீடு களைகட்ட போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement