தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி நடிகை மைனா நந்தினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது இவர் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதோடு மைனா நந்தினி அவர்கள் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இதில் இவரால் இறுதிவரை செல்ல முடியவில்லை. அதற்குப்பின் தான் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருந்த சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸில் நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால், இவர் சின்னத்திரை பக்கமே வரவில்லை. இது குறித்து பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
மைனா நந்தினி குறித்த தகவல்:
இதற்கிடையில் நடிகை மைனா நந்தினி அவர்கள் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பின் இவர் நடிகர் யோகேஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் மைனா நந்தினி தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மைனா, விதவை, மலடி போன்ற வார்த்தைகள் எல்லாம் நான் நிறைய கேட்டிருக்கிறேன்.

மைனா நந்தினி பேட்டி:
எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வாரத்திலேயே நான் பீரியட்ஸ் ஆகிவிட்டேன். உடனே என்னுடைய மாமியார், என்னமா நல்ல செய்தி சொல்லுவாய் என்று எதிர்பார்த்தேன் என்று சொன்னார். பின் அவர், என்னுடைய கணவரை பார்த்து என்ன உனக்கு வலிமை இல்லையா? என்று கேட்டார். இதை அவர் ஜாலியாக கேட்டாலும் எங்களுக்கு அது கஷ்டமாகத்தான் இருந்தது. அடுத்த மாதமும் இதே எங்களுக்கு நடந்தது. உடனே அவர், என்னிடம் என்னமா நீ என் கையில் பேர குழந்தை பெற்றுக் கொடுப்பாய் என்று பார்த்தேன்.
https://www.youtube.com/watch?v=FCLUWEtKlcw
அனுபவித்த கஷ்டம்:
இப்படி பண்ணுகிறாயே என்று கேட்டார். அப்போதுதான் அதைப்பற்றி அவர்கள் எனக்கு நிறைய அழுத்தம் கொடுப்பது புரிந்தது. நான் உடனே என்னுடைய கணவரிடம், இந்த மாதிரி எல்லாம் கேட்கிறார்கள் என்று சொன்னேன். அவர் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். அதன் பின் நல்ல செய்தியும் வந்தது. இந்த சமூகத்தில் இந்த மாதிரியான பார்வை தான் நிறைய இருக்கிறது. நம்மை கஷ்டப்படுத்தத்தான் செய்வார்கள்.

கணவர் பற்றி சொன்னது:
அந்த வழியை மீறி நீங்கள் வெளிவரும் போது தான் அது உங்களுக்கு மிகப்பெரிய வலிமையை கொடுக்கும்.
அது கூட நல்லது தான். இந்த மாதிரியான கஷ்டமான சமயங்களில் எல்லாம் என்னுடைய கணவர் யோகி எனக்கு துணையாக நின்று இருக்கிறார். என்னால் நிச்சயமாக சம்பாதித்து வீட்டையும் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், எனக்கு மன ரீதியாக சப்போர்ட் செய்வதற்கு ஒரு ஆள் வேண்டும். எனக்கு எல்லா விதத்திலும் யோகி சப்போர்ட்டாக இருக்கிறார். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று கூறியிருக்கிறார்.






