நான் இளையராஜாவை விமர்சகிக்கும் உரிமையே எனக்கு இருக்கு – பார்த்திபனுடனான பிரச்சனை குறித்து அவர் முன்னே பேசிய மிஷ்கின்.

0
200
- Advertisement -

நடிகர் பார்த்திபனை தவறாக பேசியது குறித்த சர்ச்சைக்கு மிஸ்கின் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கோவிலுக்கு போகாதீங்க என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, நடன இயக்குனர் ராதிகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி புரூப். இந்த படத்தை கோல்டன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தீபக் என்பவர் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் தன்சிகா உட்பட பலர் முக்கிய கதாபத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது.

- Advertisement -

மிஸ்கின் குறித்த தகவல்:

இதில் கலந்துகொண்ட மிஸ்கின், கடவுளுக்கு அப்புறம் பார்க்க வேண்டிய ஒரே விஷயம் சினிமா தான். நான் என்னுடைய சினிமாவுக்கு மட்டும் பேசவில்லை. எல்லா சினிமாவுக்கு தான் பேசுகிறேன். மாதத்திற்கு ஒருமுறையாவது ஒரு படத்தை குடும்பத்தில் இருக்கும் ஐந்து பேர் சென்று பாருங்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் அது குடும்பமே கிடையாது. கோவிலுக்கு போகாதீங்க, படத்துக்கு போகங்க. பாவம் பண்ணவனுங்க தான் கோயிலுக்கு போவாங்க, பாவம் பண்ண போறவங்க தான் கோவிலுக்கு போவாங்க. ஆனால், சினிமாவில் அப்படியெல்லாம் கிடையாது. தியேட்டருக்கு போய் சிரிங்க என்றெல்லாம் பேசியிருந்தார்.

மிஸ்கின் பேசிய வார்த்தை:

இப்படி மிஸ்கின் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இதற்கு பலருமே மிஸ்கினுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்கள். இதை அடுத்து சில தினங்களுக்கு முன் நடந்த பிரஸ் மீட்டில் மிஸ்கின், இதற்கு முன்னாடி நடந்த படத்தின் விழா ஒன்றில் கோயிலுக்கு போகாதீங்க என்று நான் பேசி இருந்தது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. நான் கோயிலுக்கு போகாதீங்க என்று சொன்னது இந்துக்களை மட்டும் சொல்லவில்லை. முஸ்லிம், கிறிஸ்டின் என அனைத்து மதத்தையும் தான் சொன்னேன். நான் பிறப்பால் இந்து, வளர்ந்ததெல்லாம் முஸ்லிம், திருமணத்திற்கு பிறகு கிறிஸ்டின். என்னுடைய மனைவி கிறிஸ்துவர்.

-விளம்பரம்-

மிஸ்கின் பேட்டி:

நாம் எல்லோருமே காலையில் கோயிலுக்கு போவோம். நம்முடைய வாழ்க்கையில் அம்மா, அப்பா, உறவினர்கள் எல்லோருமே கோயில் மாதிரிதான். அதனால்தான் சினிமாக்கு வாங்க, தியேட்டருக்கு போங்க என்று சொன்னேன். இப்போது எல்லாம் சினிமா தியேட்டர் காலியாக இருக்கிறது. இதனால் தான் எல்லோரும் வெளியே வந்து தியேட்டரில் படம் பாருங்கள், சிரியுங்கள் சந்தோசமாக இருங்கள் என்று பேசி இருக்கிறார். அதனை தொடர்ந்து பேசிய மிஸ்கின், ஒரு முறை இதே மாதிரி தான் நான் பார்த்திபனை என்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய அலுவலகத்திற்கு வர சொல்லி இருந்தேன். ஒரு சின்ன பரிசு ஒன்றை அவர் எனக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால், அவரிடம் யாரோ ஒருவர் நான் அவரை திட்டியதாக சொல்லி இருக்கிறார்.

பார்த்திபன் குறித்து சொன்னது:

இதை பார்த்திபன் தன்னுடைய சோசியல் மீடியாவிலும் பதிவிட்டிருந்தார். நான் என்ன சொன்னேன் என்று எனக்கு ஞாபகமே இல்லை. ஆனால், நான் உங்களைப் பற்றி அப்படி தப்பாக பேசி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய புதிய பாதை படத்தை எப்போதும் நான் கோவிலாக கும்பிடுவேன். உங்கள் படங்களில் ஏதாவது ஒன்றை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் தான் எனக்கு கடவுள். என்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து நான் இளையராஜா, மணிரத்தினம் படங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. என்னுடைய இடத்தில் இருந்து நான் ஒருவரை பற்றி பேசுவேன். ஆனால், ஒருவர் பேசுவதை போட்டுக் கொடுக்கும் நபரை மட்டும் நம்பாதீர்கள். அவன் ஒரு கோழை. இதை நான் பேசிய இடத்திலேயே அவன் தப்பு என்று என்னிடம் சண்டை போட்டு இருந்தால் அவன் நல்லவன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement