மண்ணை விட்டு பிரிந்த மற்றொரு காமெடி ஜாம்பவான் – நடிகர் மனோ பாலா திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.

0
678
Manobala
- Advertisement -

தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான்.

-விளம்பரம்-
mano-bala

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.மேலும் இந்த படத்தில் பஞ்சாயத்து நபராக ஒரு சிறிய காட்சியில்கூட நடித்திருப்பார் மனோபாலா அதன்பின்னர் பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனோபாலா பின்னர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் முதன்முதலில் கார்த்தி மற்றும் சுகாசினி வைத்து ஆகாயகங்கை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

நடித்த படங்கள் :

அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார்.

manobala

வால்டர் வீரய்யா படத்தில் மனோபாலா :

இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மனோபாலா என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது இவரது ஒல்லியான உடல் அமைப்பு தான். சொல்லப்போனால் இவரது ஒல்லியான உடல் அமைப்பு இவரது நகைச்சுவை வேடத்திற்கு மிகவும் ஏதுவாக பொருந்தியது.

-விளம்பரம்-

மனோ பாலாவிற்கு நடந்த அறுவை சிகிச்சை :

சமீபத்தில் வெளியான சிரஞ்சீவி நடித்திருந்த வால்டர் வீரய்யா என்ற தெலுங்கு படத்தில் கூட மனோபாலா நடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஆப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டாகவும் பின்னர் அவர் உடல் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் உடல்நலன் தேறி மீண்டு வந்தார்.

திடீர் மரணம் :

இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகி இருக்கிறார். மனோபாலாவின் இறப்பிற்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement