IPL ஒரு நல்ல பொழுதுபோக்கும் இல்ல, அது ஒரு டைம் Waste தான் – மிஸ்கின் சொன்ன காரணம்

0
2312
- Advertisement -

தோனி ஒரு நல்ல கேப்டன். ஆனால், நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று ஐபிஎல் விளையாட்டு குறித்து மிஸ்கின் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழை பெய்ய தொடங்கியதால் போட்டியானது நிறுத்தப்பட்டது. மேலும், நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது நேற்று (29/05/2023) இரவு 7.30 மணியளவில் மீண்டும் நடைபெற்றது.

-விளம்பரம்-

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 215 ரன்கள் சென்னை எடுத்தால் வெற்றி எஎன்ற இலக்கை நோக்கி விளையாடிய போது அனைவரும் எதிர்பார்த்த படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது ஐந்தாவது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

மிஸ்கின் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நான் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் பிளேயர். என்னுடைய தெருவில் நாங்கள் ஒரு டீம் வைத்திருக்கிறோம். நான் ஓப்பனிங், பவுலர், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வேன். கிரிக்கெட் வீரராக தான் வருவேன் என நினைத்தேன். அதன் பிறகு தான் எனக்கு உண்மையான புரிந்தது. அதனால் நான் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

மிஸ்கினுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள்:

டெண்டுல்கர் இருக்கும் வரை நான் கிரிக்கெட் பார்த்தேன். அதற்குப் பிறகு கிரிக்கெட் பார்ப்பது நிறுத்திவிட்டேன். கேம் என்றால் வேட்டைக்காரன் வார்த்தையில் இரை என்று அர்த்தம். ஸ்போர்ட்ஸ் என்பது மாறி உணர்ச்சி பூர்வமாக கிரிக்கெட் மாறி விட்டது. ஒரு நல்ல பவுளர் ரிச்சர்ட் ஹார்லி பவுலிங் போடும் போது, இன்ஸ்விங் போடுறாரா, அவுட்ஸிங் போடுறாரா என்பதே தெரியாது. அதேபோல் நான் ரொம்ப ரசித்தது அசாரூதின், கபில்தேவ், கவாஸ்கர், பார்டர், டெண்டுல்கரை தான். டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ்.

-விளம்பரம்-

கிரிக்கெட் குறித்து சொன்னது:

டெண்டுல்கர், ரஹ்மான் என்னை எப்போதும் பிரமிக்க வைத்தவர்கள். கிரிக்கெட் ஒரு அழகான போட்டி, அருமையான போட்டி. ஒரு பவுலர் பந்து வீசும் போது அது நல்ல பந்தாக இருந்தால் பேட்மேன்ஸ் அல்லது பந்து வீச்சாளரை பாராட்டுவார்கள். ஆனால், இன்று அந்த கிரிக்கெட் இல்லாமல் போனது. எல்லோரும் வெற்றியை நோக்கி மட்டுமே விளையாடுகிறார்கள். சினிமாவை எனக்கு கற்று தந்ததும் கிரிக்கெட் தான். ஆழமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் நல்ல கதை எழுதுவோராக மாறலாம். இயக்குனராக நிறைய கிரிக்கெட் புத்தகங்கள் படிக்கிறேன். ஐபிஎல் போட்டிகளை நான் விரும்புவதில்லை. தினமும் அந்த போட்டி நடக்கிறது. அந்த போட்டியை காண என் நண்பர்கள் டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவார்கள்.

தோணி குறித்து சொன்னது:

என்னை கேட்டால் அதெல்லாம் வீண் தான். அதை நான் விமர்சனமாக வைக்கிறேன். இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. தற்போது தோனி ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், அவர் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஐபிஎல் ஒரு நல்ல பொழுதுபோக்கு இல்லை. விளையாட்டும் இல்லை. இந்த ஐபிஎல் காரணமாக நிறைய தியேட்டர்களில் கூட்டம் இல்லை. பல புதிய படங்கள் பாதிக்கிறது. ஐபிஎல் காலத்தில் புது படம் வெளிவிட தயங்குவார்கள். ஐபிஎல் மீது எனக்கு உடன்பாடில்லை. நான் அதை பார்ப்பதே இல்லை. தோனி ஒரு நல்ல கேப்டன். ரொம்ப அமைதியான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அழகாக நடத்துவார். அது அவருடைய சிறந்த குணம். அவர் கேப்டனாக ஓகே ஆனால், பேட்ஸ் மேன் இல்லை. நல்ல கீப்பர் என்று சொல்லலாம் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement