லியோ வெற்றி விழாவில் கேலிக்கு உள்ளான முத்தம் – மிஸ்கின் காட்டமான பதில்

0
381
- Advertisement -

லியோ வெற்றி விழாவில் விஜய் இடம் மிஸ்கின் நடந்து கொண்டிருக்கும் விதம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் வெற்றி விழா குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் 540 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்தது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜய், லோகேஷ், திரிஷா உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

லியோ வெற்றி விழா:

மேலும், லியோ படத்தின் விழாவில் விஜய் பல விஷயங்களை பேசியிருந்தார். விழாவில் பிரபலங்கள் பலரும் லியோ படம் குறித்தும், விஜய் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் லியோ படத்தில் நடித்த மிஷ்கின் கூறியிருப்பது, புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜெண்ட் பற்றி படித்து இருக்கிறேன். நான் நேரில் பார்த்த லெஜன்ட் விஜய் தான் என்று கூறி மேடையிலேயே மிஸ்கின் தலைவணங்கி விஜயின் கைக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார்.

மிஸ்கின் அளித்த பேட்டி:

தற்போது இது குறித்துதான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளம்புகிறது. பலருமே இதை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மிஸ்கின் கூறி இருப்பது, என்னை எல்லோரும் பணிவில்லாதவன் என்று தான் சொல்வார்கள். ஆனால், இப்போது மிஸ்கின் பணிவாக இருக்கிறார் என்று சொல்லும்போது நன்றாகத்தான் இருக்கிறது. விஜய் ஒரு லெஜன்ட். அவருக்கு கையில் முத்தம் கொடுத்ததற்கு இவ்வளவு விமர்சனமா! எதற்கு என்று புரியவில்லை.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

அதை நான் என் மனதார செய்தேன். பொதுவாகவே நான் எல்லா விஷயங்களையும் என் மனதார தான் செய்வேன். சினிமாவை மட்டும் தான் என் அறிவில் செய்வேன். மற்றவர்களுடன் பழகும் போதும் நான் மனதில் இருந்து தான் பழகுவேன். என்னுடைய கேரியரை தொடங்கியதை யூத் படத்தில் தான். என்னை குழந்தை போல் தம்பி விஜய் பார்த்துக் கொண்டார். அவர் மகா கலைஞர், நல்ல மனிதன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement