ஷூட்டிங் முழுதும் விஜய் கிட்ட பேசவே இல்ல, ஏன்ணே பேச மாற்றீங்கன்னு கேட்டார் – மிஸ்கின் பகிர்ந்த சுவாரசிய தகவல்.

0
3235
Leo
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக ஜொலித்து வரும் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இயக்குனர் மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் இயக்கிய யூத் படத்தில் கூட சிறு காட்சியில் மொட்டை தலையுடன் வந்திருப்பார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிஸ்கின், விஜய் குறித்து பேசியதாவது, நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஆறுமாதம் விஜயிடம் நான் எதுவுமே பேசவில்லை. பின்னர் ஆறு மாதம் கழித்து என் கழுத்துக்கு பின்னால் என் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என்று கேட்டார். அதற்கு நான் உங்களை நான் ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன்.

- Advertisement -

அதன் பின்னர் நான் சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன். அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதினேன் என்று கூறினேன். அதற்கு விஜய் என் கழுத்தை பிடித்து இழுத்து என்னை லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கூறினார்.

அதற்கு நான், உங்க அப்பா ஒரு 18 சீன் மாத்தி இருப்பாரு, நீங்க ஒரு 18 சீன் மாத்தி இருப்பீங்க. நான் தற்கொலையே பண்ணி இருப்பேன் அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பின்னர் நான் வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்து விட்டேன். . கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதையை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கதை ஒரு பௌத்தாரை பற்றிய கதை அது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இ

-விளம்பரம்-

ப்போது இல்லை என்றாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன்’ என்று பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் நிறைவு பெற்று இருபாதகவும் மிஸ்கின் கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஆதாரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், லியோ படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றியதை சந்தோசமாக உணர்வதாகவும் கூறினார். படப்பிடிப்பு தளத்தில் விஜய், தன்னை பத்திரமாக ஆரத்தழுவி பார்த்து கொண்டதாகவும், 20 வருடங்களாக விஜய் மாறாமல் இருப்பது சந்தோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement