தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
விஜய்-அட்லீ படம்:
இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
This Man Growth @Atlee_dir ♥️🔥 pic.twitter.com/FoujSnHXl7
— Ayyappan (@Ayyappan_1504) July 12, 2023
ஷாருக்கான்-அட்லீ படம்:
பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது.
அட்லீயின் வளர்ச்சி :
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.கடந்த சில திங்கங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. மேலும், இந்த ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அட்லீக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அட்லீ 2013 ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு வந்த கேலியான கமண்ட் வைரலாகி வருகிறது.
2013 ஆம் ஆண்டு தான் அட்லீ தனது முதல் படமான ராஜா ராணி படத்தை இயக்கி இருந்தார். அந்த சமயத்தில் அட்லீயை யாருக்கும் பெரிதாக தெரியாது. இப்படி ஒரு நிலையில் அட்லீ ஷாருக்கானுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு சிலர் ‘கண்டிப்பாக இது போட்டோஷாப் தான்’ என்று கேலி செய்து இருக்கின்றனர். ஆனால், இன்று ஷாருக்கானை வைத்தே அட்லீ ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.