ஜோதிகா பட கெட்ட வார்த்தை! ரஜினி, கமல், அஜித் படங்களில் வந்துள்ளது தெரியுமா?

0
1389
naachiyaar

பொதுவாக பொது ஊடகத்தில் வெளியிடப்படும் ஒளி, ஒலிப்படங்கள் சென்ஸார் செய்யப்பட வேண்டும் என்பது சட்டம். சென்ஸார் செய்யப்படும் பட்ங்கள் குறிப்பிட்ட சான்றிதலுக்கு ஏற்ப சென்ஸார் போர்ட் கூறும் காட்சிகளை நீக்கினால் தான் அந்த குறிப்பிட்ட U அல்லது U/A சான்றிதல் கிடைக்கும்.
naachiyaarசில இயக்குனர்கள் படத்தின் கருவிற்க்காக அந்த காட்சிகளை நீக்காமல் A சான்றிதலுடன் வெளியிடப்படும் படங்கள் கூட உள்ளது. மேலும், தற்போதெல்லாம் சில ஆக்ரோஷமான வார்த்தைகள் கூட A சான்றிதலை கொண்டு வந்துவிடுகின்றன.

அப்படி தான் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வீ பிரகாஷ் நடிப்பில் வரவிருக்கு ‘நாச்சியார்’ படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசரின் இறுதில் ஜோதிகா, ‘தே*யா ப**’ என்னும் கெட்ட வார்த்தையை உபயோகிப்பது போல் ஒரு காட்சி வந்தது.
naachiyaarஅதனைப் பார்த்ததும் பெண்ணியவாதிகள் என்று சொல்லக் கூடிய பலர் கண்டத்தை தெரிவித்தனர். ஆனால், பலர் அந்த காட்சியில் பெரிதாக எதுவும் இல்லை, அதனால் என்ன? என்பது போல் தான் ஆதரவு தெரிவித்தனர். அந்த குறிப்பிட்ட வார்த்தை இதற்கு முன் தமிழ் படங்களில் வந்துள்ளது, தற்போது அந்த படங்களைப் பார்ப்போம்

இதையும் படிங்க: கோபம் குறைந்தால் தான் விஜய்யின் 62 படத்துக்கு ஜோடி ! பிரபல நடிகை ?

ரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த ‘விடுதலை’ படத்தில் ஒருவர் ரஜினி ஆங்கிலத்தில் அப்படி திட்டுவார், பின்னர் அதற்கு தமிழ் விளக்கம் கொடுத்து அப்படி பேசக்கூடாது என எச்சரிப்பார்.

அதே போல், கமலின் விக்ரம் படத்தில் தன் மனைவியை கொன்றவர்களைப் பார்த்து ‘தேவி* ப**’ எனத் திட்டுவார்.
Rajini-Kamal-Ajithமேலும், அஜித்தின் மங்காத்தா படத்திலும் லட்சுமிராய் செய்த த்ரோகத்தினால் அவரை அப்படி திட்டுவார் அஜித். கற்றுது தமிழ் படத்திலும் இந்த வார்த்தை வரும்.இப்படி இத்தனை படங்களில் முன்னனி நடிகர்களே இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கும் போது, ஜோதிகா உபயோகித்தால் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.